திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!

Dec 12, 2024,06:09 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை தீபமலை உச்சியில் தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராட்சத கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அதீத கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். குறிப்பாக திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் மலையின் பின்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு வீடுகளின் மேல் விழுந்ததில் நான்கு சிறார்கள் உட்பட 7 பேர் மண் குவியலில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 7 பேரையும் மீட்ட சம்பவம் காண்போரை பதைபதைக்க வைத்தது.



டிசம்பர் 13ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட வேண்டும். புயல் கன மழை காரணமாக, திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், தீபம் ஏற்ற செல்லும் நடைபாதையில் 500 மீட்டர் உயரம், 150 மீட்டர் அகலத்திற்கு செங்குத்தாக மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் முற்றிலும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் தீபம் ஏற்றப்படுமா? இல்லையா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. 

இதற்கு, பதில் அளிக்கும் விதமாக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசுகையில், இந்த ஆண்டு மலை உச்சியில் தீபம் எரியும். திருவண்ணாமலை  மலை மீது தீபம் ஏற்ற சூழ்நிலைக்கு ஏற்ப மனித சக்தியை பயன்படுத்த உள்ளோம். 350 கிலோ கொப்பரை திரி 450 கிலோ நெய் சுமக்க தேவையான அளவு மனித சக்தியை பயன்படுத்தி எவ்வித அசம்பாவிதமும், உயிர்சேதமும் இன்றி தீபத்திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகா தீப திருவிழா நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

தற்போது திட்டமிட்டபடி தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தொடங்கி விட்டன.  கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையில், நாளை மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கு தேவையான கொப்பரைக்கு நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்ட நிலையில், இன்று கொட்டும் மழையிலும் அதனை மலைக்கு கொண்டு செல்லும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது மலை உச்சியை கொப்பரை அடைந்து விட்டது. இதனால், நாளை ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்