திருவண்ணாமலை: திருவண்ணாமலை, வ.உ.சி. நகரில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்ட வீட்டில் சிக்கிக் கொண்ட ஏழுபேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. பிஞ்சுக் குழந்தைகளின் உடல்களைப் பார்த்து அங்கிருந்தோர் கதறி அழுதனர்.
திருவண்ணாமலையில் நேற்று மிக கன மழை பெய்து ஊரையே வெள்ளக்காடாக்கி விட்டது. இந்த கன மழையின் காரணமாக, தீப மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியில் ஒரு பெரிய பாறை உருண்டு வந்து 3 வீடுகளின் மீது விழுந்தது. மண் சரிவு காரணமாக அந்த வீடுகள் மண்ணில் புதைந்தன.

சம்பவத்தின்போது அந்த வீடுகளில் 7 பேர் வரை இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து பாறையை அகற்றி வீட்டில் உள்ளவர்களை மீட்கும் முயற்சிகள் தொடங்கின. ஆனால் தொடர் மழையால் மீட்புப் பணிகள் தாமதமடைந்தன. மேலும் பாறையையும் அகற்ற முடியவில்லை. இதனால் வீட்டுக்குள் சிக்கிக் கொண்டவர்களின் நிலை குறித்த கவலை ஏற்பட்டது.
தொடர்ந்து மழை பெய்து வந்த போதிலும் கூட மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த நிலையில் இன்று இரவு வாக்கில் கிட்டத்தட்ட 20 மணி நேரமாக நடந்த மீட்புப் பணியின் நிறைவாக 7 பேரின் உயிரற்ற உடல்களும் மீட்கப்பட்டன.
வீட்டுக்குள் சிக்கிக் கொண்டவர்கள் யார் யார்?
இந்தத் துயரச் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் விவரம் தெரிய வந்துள்ளது.
ராஜ்குமார் (32 )- மீனா (26 ), அவர்களது குழந்தைகள் கவுதம் (9), இனியா (7) மற்றும் உறவினர்களான மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகியோரே வீட்டுக்குள் சிக்கிக் கொண்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதில் ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்தபோது வீட்டுக்கு வெளியே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். மண் சரிவு ஏற்பட்டதும் பயந்து போய் அனைவரும் வீட்டுக்குள் ஓடி விட்டனர். அவர்கள் வெளியே ஓடி வந்திருந்தால் உயிர் தப்பியிருக்கக் கூடும். ஆனால் வீட்டுக்குள் போனதால் உள்ளே சிக்கிக் கொள்ள நேரிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
{{comments.comment}}