போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்...தற்காலிக ஓட்டுனர் நடத்துனருக்கு அரசு அழைப்பு

Jan 10, 2024,12:00 PM IST

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டத்தை அடுத்து அரசு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தேவை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாவட்ட போக்குவரத்து கழகங்களை, தொழிலாளர்கள் அணுகவும் அரசு அறிவுறுத்தி வருகிறது.


தமிழகம் முழுவதும் நேற்று போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை  துவங்கின. இருப்பினும் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்தன.


தொழிற்சங்கங்கள் தனியாகவும், அண்ணா தொழில் சங்க பேரவை தனியாகவும் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர். போக்குவரத்து கழக தொழில் சங்கங்கள், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.




பேச்சுவார்த்தையில்  உடன்பாடு ஏற்படாததால் போக்குவரத்து தொழில் சங்க நிர்வாகிகள் போக்குவரத்து வேலை நிறுத்தத்தை தொடர போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு உடனடியாக வரவேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


பண்டிகை காலங்களில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்பதால், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த வித விடுப்புகளையும் எடுக்காமல் பணிக்கு வரவேண்டும் என்று போக்குவரத்து துறை கேட்டுக் கொண்டுள்ளது.


சேம மற்றும் தினக்கூலி  பணியாளர்கள் கட்டாயமாக பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்நிலையில் பெரும்பாலான பணியாளர்கள் பணிக்கு வந்தனர். இதனால் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில்,  போக்குவரத்து தொழில் சங்கங்களுடன் நடத்திய பேச்சு தோல்வி அல்ல. அது இருதரப்பு பேசி சுமூக முடிவிற்கு வர வேண்டும். தொழில் சங்கங்கள் 6 கோரிக்கைகளை தெரிவித்து இருந்தனர். அதில் நான்கு கோரிக்கைகள்  நிறைவேற்றப்பட்டுள்ளது.


பிற கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். தற்போது அரசு நிதி நிலையில், இதைச் செய்வது சிரமம் என்பதால், இப்போது செய்ய இயலாது என்பதை தெரிவித்தோம். அதை புரிந்து கொள்ளாமல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று கூறவில்லை. நிதி நிலைமை சீரான பிறகு நிறைவேற்றி தரப்படும் என்றுதான் கூறியிருக்கிறோம் என்று  கூறியிருந்தார்.


இந்நிலையில், பொங்கல் பண்டிகை வர உள்ளதால், சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்த நிலையில், பொது மக்கள் சிரமமின்றி போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதால்,தற்காலிக பணியாளர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. அசல் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

அதிகம் பார்க்கும் செய்திகள்