சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சிங்கப்பூர் சுற்றுலாவுக்கு தேர்வாகியுள்ள 42 மாணவர்களை சந்தித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஓவிய கண்காட்சியை தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்,
மும்மொழி கொள்கையை ஏற்றால் அடுத்த அரை மணி நேரத்தில் நிதியை விடுவிப்போம் என மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது.ஒன்றிய அரசு நெருக்கடி கொடுத்தாலும் பள்ளி கல்வித்துறை நிலுவைத் வைக்காமல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.நானே இந்தி அல்லாத மாநிலத்தில் தான் வந்திருக்கிறேன் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். நீங்களும் இந்தியை ஏற்றுக் கொள்ளுங்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வற்புறுத்துகிறார்.
இந்திய ஒன்றியத்திற்கு முன்மாதிரியாக கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகையிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவர் செல்வங்களையும் ஆசிரியர் பெருமக்களையும் ஒன்றிய அரசு ஏமாற்றி வருகின்றது.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்கள் பிள்ளைகளையும் ஆசிரியர் பெருமக்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மாணவர்களுக்கு என்ன மாதிரியான அறிவுசார் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம் என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாமக செயற்குழு கூட்டம்: அன்புமணிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: ரயில்வே நிதியுதவி அறிவிப்பு!
Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?
பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?
யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!
ஆனி மாத வளர்பிறை பிரதோஷம்.. சிவன் பார்வதி வழிபாட்டுக்கு உகந்த நாள்!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல், அதிர்ச்சி!
நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!
{{comments.comment}}