சென்னை : 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் :
2026ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இந்த முறை அதிகமான விடுமுறை நாட்கள் வந்ததால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மிக குறைவான நாட்களே அவகாசமாக அளிக்கப்பட்டது. மார்ச் 31, ஏப்ரல் 02, ஏப்ரல் 04, ஏப்ரல் 06 ஆகிய நான்கு நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. வேட்புமனு தாக்கலின் முதல் நாளிலேயே 234 தொகுதிகளிலும் 251 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இறுதி வேட்பாளர் பட்டியல் :

தமிழகம் முழுவதும் இதுவரை 1000க்கும் அதிகமான வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இன்று பகல் 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் இருந்தது. இதன் காரணமாக இன்று அதிகமானவர்கள் மனுத்தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
கடைசி நாளான இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அனைத்தும் ஏப்ரல் 07ம் தேதியான நாளை பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 09ம் தேதியாகும். அன்று மாலை 5 மணிக்கு பிறகு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவார்கள். களம் தெளிவாகும் என்பதால் அதற்கு பிறகு யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக மக்களுக்கும் தெளிவு ஏற்படும். ஏப்ரல் 21ம் தேதி இரவு 10 மணியுடன் தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடையும். ஏப்ரல் 23ம் தேதியன்று பதிவாகும் ஓட்டுக்கள் மே 04ம் தேதியன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}