சென்னை : ஃபெங்கல் புயலை தீவிர இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
வங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடலிலேயே நிலை கொண்டு, பிறகு புயலாக மாறியது. இதற்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டது. இந்த புயல் கரையை கடக்கும் போது நவம்பர் 30ம் தேதி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக விழுப்புரம், புதுச்சேரியில் மிக அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக கனமழை கொட்டி தீர்த்தது. இதில் பல பகுதிகளில் நீரில் மூழ்கின.

விழுப்புரம் மாவட்டத்தில் கீழ் தளம் முழுவதும் நீரில் மூழ்கியதால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்து மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகினர். பல பகுதிகளில் தேங்கிய மழை நீர் வடிவதற்கே பல வாரங்கள் ஆகியன. ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாத நிலையே உள்ளது. இந்நிலையில் புயல் பாதிப்பை சீர் செய்ய தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய குழு தமிழகம் வந்து ஆய்வு நடத்தியது.
இந்நிலையில் ஃபெங்கல் புயலை தீவிர இயற்கை பேரிடமாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிக்கு பயன்படுத்த முடியும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Poem on Life: வாழ்க்கை!
இணையத்தில் செம டிரெண்டிங்.. பரபரக்கும் ‘You+Me - Against the World’ திரைப்பட கிளைமேக்ஸ்!
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
{{comments.comment}}