சென்னை: தீபாவளியை மக்கள் பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும் கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் உற்சாகமாக அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து உற்சாகமாக கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர். காலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி உண்டு என்பதால் காலையிலேயே பட்டாசுச் சத்தம் காதுகளைத் துளைத்தது. அதேபோல இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி உண்டு.
இந்த நிலையில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு தமிழ்நாடு அரசு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காலை 6 மணி முதல் ஏழு மணி வரையிலும் இரவு ஏழு மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக்காக்க, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனைகள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசை ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களை கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு சென்னைப் பெருநகர மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}