வட மாநிலங்களைப் போல.. இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்.. செல்வப்பெருந்தகை கண்டனம்

Jan 21, 2025,07:07 PM IST

சென்னை: ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.


மாட்டின் சிறுநீர் அதாவது கோமியம், தமிழ்நாட்டில் பேசு பொருளாகியுள்ளது. சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கோமியம் குடிப்பதை ஆதரித்தும், தனது தந்தையின் காய்ச்சல் கோமியம் குடித்ததால் சரியானதாகவும் கூறியது சர்ச்சையானது. பல்வேறு கட்சிகளுக்கும் அவருக்குக் கண்டனம் தெரிவித்தன.


இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் விளக்கம் கேட்டபோது, பஞ்சகவ்யம் என்பது நிரூபிக்கப்பட்டது. இதற்கு அறிவியல் பூர்வ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். இதனால் விவாதம் மேலும் வலுத்துள்ளது.




காமகோடி கூறியதை ஆதரித்து முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் இன்று கருத்து தெரிவித்துள்ளார். மாட்டு இறைச்சியை சாப்பிடுகிறார்கள். ஆனால் கோமியம் என்றதும் ஏன் அரசியலாக்குகிறார்கள். மாட்டின் கோமியம் ஆயுர்வேதத்தில் ஒரு மருந்து. அது 80 வகையான நோய்களை குணப்படுத்துவதாக கூறுகிறார்கள். அதில் காய்ச்சலும் ஒன்றாக இருக்கலாம் என்று கூறினார் தமிழிசை.


இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?


மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம். இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?


வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார் செல்வப் பெருந்தகை.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை

news

தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!

news

தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?

news

தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

news

எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை

அதிகம் பார்க்கும் செய்திகள்