சென்னை: குரூப் 2 முதன்மை தேர்வுகள் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், போட்டி தேர்வுகளில் தேர்வு எழுதுவோர் முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிசி சார்பில் அரசு பணிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப் 3, குரூப் 4 ஆகிய போட்டிகள் தேர்வுகள் தமிழ்நாட்டு தேர்வாணையத்தால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2a வில் உள்ள மொத்தம் 2327 காலி பணியிடங்கள் உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்த குரூப் 2 மற்றும் 2 ஏ மூலம் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், வனவர், உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் நிரலர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதற்கான முதன்மை போட்டித் தேர்வுகள் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2a தேர்வு எழுதுபவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அறுபடை வீடுகளுக்கு நிகரான.. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
பொய்!
குடும்பம் என்பது ஒரு புத்தகம்.. சிறு பிழைகள் வரலாம்.. திருத்திக் கொண்டு படிக்க வேண்டும்!
அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்
திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!
6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
புதிய ஆளுநர்கள் நியமனம்: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநரானார் ராஜேந்திர அர்லேகர்
அடுத்த 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
{{comments.comment}}