சென்னை: நாளை மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் மார்ச் 10ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி. இதற்காக மக்கள் இன்று முதல் தங்களின் குலதெய்வத்தை வணங்குவதற்காக சொந்த ஊருக்கு பயணிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் மகா சிவராத்திரியுடன் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி வருவதால் மக்கள் பேருந்துகளில் பயணிக்க கூட்டம் அலைமோதும்.
இதனை தடுக்க தமிழக போக்குவரத்து துறை தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், ஆகிய பகுதிகளுக்கு இன்று 270 சிறப்பு பேருந்துகளும், நாளை 300 பேருந்துகளும், மார்ச் 9ஆம் தேதி 430 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் 70 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தவிர பெங்களூர், திருப்பூர், ஈரோடு, மற்றும் கோவையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
மேலும் சிறப்பு பேருந்துகளில் பயணிகள் சரியாக பயணம் செய்கிறார்களா.. அவர்களுக்கு இடையூறு எதுவும் வருகிறதா.. அல்லது சிறப்பு பேருந்துகளை முறையாக இயக்கப்படுகிறதா.. என்பதை கண்காணிக்க பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?
{{comments.comment}}