ம்ம்ம்.. இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா?.. பயப்படாதீங்க.. சும்மா வாங்க!

Feb 29, 2024,01:40 PM IST

சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் நகை பிரியர்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


தை மாதங்களில் எல்லாம் தங்கம் விலை குறைந்து இருந்தது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்பதில் ஐயமில்லை. தற்போதைய மாசி மாதத்தில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. விலை குறைந்தால் மகிழ்ச்சி அடைவதும், விலை அதிகரித்து கவலை கொள்வதும்  நகை வாங்குபவர்களின் இயல்பான நிலை என்றே சொல்லலாம்.




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5815 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 46,520 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6344 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.50704 ஆக உள்ளது.


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.75.70 காசாக உள்ளது.  8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 605.60 காசாக உள்ளது. 


தங்கத்தின் விலை எவ்வளவு கூடினாலும் அதன் தேவை குறைய போவது கிடையாது. தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். நேற்று  சரிவில் இருந்த தங்கம் சவரனுக்கு ரூ. 40 குறைவாக இருந்த  நிலையில், தேவை அதிகரித்ததன்  காரணத்தினால் விலை உயரத் தொடங்கியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல், நகையில் முதலீடு ஆகியவற்றின் காரணத்தினாலும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக  நிபுணர்கள் தெரிவித்து  வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்