12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 01, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்

Dec 01, 2025,10:26 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், கார்த்திகை 15 ம் தேதி திங்கட்கிழமை

ஏகாதசி, சுபமுகூர்த்த நாள். உலக எய்ட்ஸ் தினம். இன்று பகல் 02.36 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. இரவு 07.52 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.14 வரை அமிர்தயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 01.45 முதல் 02.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். நண்பர்களின் உதவியால் காரியங்கள் எளிதாகும். பிள்ளைகளின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். மருத்துவர்களுக்கு இது சாதனை படைக்கும் நாளாக அமையும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலிடத்தில் மதிப்பு உயரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு பண வரவில் சற்று பற்றாக்குறை ஏற்படலாம். ஆனால், பூர்வீக சொத்துக்களால் உங்களுக்கு நல்ல பயன் கிடைக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை சேரும். விற்பனையை அதிகரிக்க நீங்கள் சலுகைகளை அறிவிப்பீர்கள். சகோதர வகையில் சில சங்கடங்கள் வரலாம். மாணவர்கள் இன்று பாராட்டப்படுவார்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் பண விஷயங்களில் யாரையும் நம்பி இருக்க வேண்டாம். எந்த ஒரு முடிவையும் நீங்களே எடுத்து செயல்படுவது நல்லது. தொலைதூர ஆலயங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி தேவைப்படும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து சிறிய நன்மைகளை எதிர்பார்க்கலாம். உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


கடகம் - கடக ராசிக்காரர்களை நண்பர்களும் உறவினர்களும் தேடி வந்து பேசுவார்கள். பாதியில் நின்றுபோன கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணிகள் இன்று முழுமையடையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களின் திருமண கனவுகள் இன்று நிறைவேறும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் கருநீலம்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று ஏதேனும் முக்கியமான விஷயம் இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இன்று இறைவனைப் பிரார்த்தனை செய்வது உங்களுக்கு மன அமைதியைத் தரும். யாரிடமும் வாக்குவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு அரசு சார்ந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். வெளியுலகில் உங்கள் செல்வாக்கு உயரும். நல்லவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டி தொடரும். தம்பதிகள் இருவரும் சேர்ந்து சேமிப்பை அதிகரிப்பார்கள். மாணவர்கள் நன்றாகப் படிப்பார்கள். பணவரவில் எந்த சிக்கலும் இருக்காது. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மேலதிகாரிகளிடம் அமைதியாகப் பேசுவது நல்லது. உங்கள் மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களின் குறிக்கோள்கள் நிறைவேறும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் கடல்பச்சை.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் தந்தையார் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். பயணங்களால் உங்களுக்கு நல்ல பயன் உண்டு. பணப் பற்றாக்குறை நீங்கும். புதிய நிலம் அல்லது வீடு வாங்கும் யோகம் உண்டு. வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படலாம். தம்பதிகளிடையே இருந்த சங்கடங்கள் தீரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு சகோதர வழியில் சில பிரச்சனைகள் வரலாம். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் சேரும். பழைய பாக்கிகள் கைக்கு வரும். வீட்டில் இருந்த சிக்கல்கள் விலகும். புதிய கிளைகளைத் தொடங்குவீர்கள். உங்கள் உடல் பொலிவு கூடும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும். சகோதரர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வழக்கறிஞர்களுக்கு வெற்றி குவியும். உறவினர்களால் உங்களுக்கு நன்மை உண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். கலைஞர்களுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்குத் தேவைக்கேற்ப பணம் வரும். மருத்துவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். உங்கள் பேச்சில் இனிமை கூடும். சொத்து வாங்கும் முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகளுடன் வெளியூர் சென்று வருவீர்கள். உங்கள் மகள் உங்களைப் புரிந்து கொள்வாள். எதிர்ப்புகளை நீங்கள் சமாளிப்பீர்கள். பொதுத் தொண்டில் புகழ் பெறுவீர்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு தாமதமான வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்வீர்கள். நீண்ட நாள் இருந்த தலைவலி குணமாகும். உயர்கல்விக்கான முயற்சிகள் வெற்றி பெறும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். திருமணம் கூடி வரும். எதிரிகளின் வலிமை குறையும். கடன் சுமை குறையும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டிட்வா புயலுக்குப் போட்டியாக விறுவிறுன்னு ஏறி வரும்.. தங்கம் விலை.. அம்மாடியோவ்!

news

அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!

news

மசாலா பாண்டு விவகாரம்...கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை சம்மன்

news

டிசம்பர் மாதம் வந்தாச்சு.. களை கட்டும் விழாக்கள்.. என்னெல்லாம் இருக்கு பாருங்க!

news

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று துவக்கம்...புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 01, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும்

news

முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!

news

கைத்தட்டல்.. தட்டுங்கள்.. தட்டத் தட்ட ஊக்கம்தான்!

news

நாணலையே நாணச்செய்யும் இளந்தென்றல் வீசயிலே...!

அதிகம் பார்க்கும் செய்திகள்