12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 04, 2025... இன்று நம்பிக்கை அதிகரிக்கும் நாள்

Dec 04, 2025,09:55 AM IST


தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு டிசம்பர் 04 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், கார்த்திகை 18ம் தேதி வியாழக்கிழமை

பெளர்ணமி, பாஞ்சராத்திர தீபம், இந்திய கடற்படை தினம். இன்று காலை 07.54 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. மாலை 03.08 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.15 வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல்10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குலதெய்வ வழிபாடு நிறைவேறும். மளிகைக் கடை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். மாமியார் தொல்லைகள் குறையும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவார்கள். அரசியல்வாதிகளின் புகழ் மற்றும் கௌரவம் உயரும். நீண்ட காலமாக குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வெளிவட்டாரத்தில் மதிப்பைப் பெறுவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களை உங்கள் வழியில் கொண்டு வர முயற்சிப்பீர்கள். தம்பதிகள் இணைந்து திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.


கடகம் - கடக ராசிக்காரர்கள் மார்க்கெட்டிங் பிரிவில் இலக்குகளை அடைவார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கமிஷன் மற்றும் இரும்புத் தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானம் கடைப்பிடிக்க வேண்டும். பொறுமை அவசியம். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வான்நீலம்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட டெண்டர்களில் வெற்றி பெறுவார்கள். நடைபாதை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். புதியவர்களின் நட்பு வலுப்பெறும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


கன்னி - கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். கலைஞர்களுக்கு வரவேண்டிய பாக்கித் தொகை வந்து சேரும். பயணங்களின் போது கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்களால் உங்கள் தொழிலுக்கு உதவி கிடைக்கும். வீட்டையும் கவனத்தில் கொள்வது நல்லது. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால், தொழில் சார்ந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சாதாரண வார்த்தைகள் கூட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்பதால் கவனமாகப் பேச வேண்டும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிரபலங்கள் மூலம் உதவி கிடைக்கும். தொழிலில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். ஆன்லைன் மற்றும் பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்கள், நிலவரத்தை அறிந்து நிதானமாகச் செயல்பட வேண்டும். தம்பதிகளிடையே அன்பு வலுப்பெறும். பெண்களுக்கு கை, கால் வலி குறைந்து உடல் நலம் சீராகும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வரும். உடல் உற்சாகத்துடன் காணப்படும். கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல தொகை கிடைக்கும். ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாகப் பேச வேண்டாம். நண்பர்களின் ஆதரவு உண்டு. சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


மகரம் - மகர ராசிக்காரர்கள் பழைய நண்பரைச் சந்திப்பார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவார்கள். பணவரவுக்குக் குறைவிருக்காது. உடல் நலம் தேறும். வியாபாரிகள் வியாபாரத்தில் புதிய தந்திரங்களைக் கற்றுக் கொள்வார்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கியப் பொறுப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்பணம் கிடைக்கும். சம்பளம் உயரும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


கும்பம் - கும்ப ராசிக்காரர்கள் மார்க்கெட்டிங் பிரிவில் புதிய ஆர்டர்கள் மற்றும் ஏஜென்சிகளைப் பெறுவார்கள். அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம். அலுவலக வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். வங்கிப் பணியாளர்கள் நிம்மதியடைவார்கள். இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாகனம் ஓட்டும்போது முக்கிய ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு மளிகை வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். மகளின் சுபகாரியம் சம்பந்தமாக வெளியூர் சென்று ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்வீர்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கருநீலம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அவசரப்பட்டு துணியை துவைச்சிராதீங்க.. இன்னும் முடியல.. மழை தொடரும்...இந்திய வானிலை மையம் தகவல்!

news

ரஷ்ய அதிபரின் டெல்லி வருகை...தாறுமாறாக ஏறிய ஹோட்டல் கட்டணங்கள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 04, 2025... இன்று நம்பிக்கை அதிகரிக்கும் நாள்

news

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடல் நலக்குறைவால் காலமானார்

news

குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரும் வீட்டுக்கூரை சூரிய மின்சக்தி திட்டம்

news

ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் மூச்சு திணறி பலி!

news

வருகிறார் வா வாத்தியார்.. ரீலீஸ் தேதி அறிவிப்பு.. 3வது லிரிக்கல் வீடியோவும் வெளியானது

news

முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமான சந்தித்து பேசினோம்: செல்வப்பெருந்தகை பேட்டி

news

இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி.. அனைத்து விலைகளும் உயரும் அபாயம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்