தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 05 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், மார்கழி 21 ம் தேதி திங்கட்கிழமை
தேசிய பறவைகள் தினம். இன்று பகல் 01.24 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. மாலை 05.02 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : 09.30 முதல் 10.30 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்

மேஷம் - விலை உயர்ந்த பொருட்கள் கைக்கு வந்து சேரும். புகழ்பெற்றவர்களை சந்திப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். விவாதங்களில் வெற்றி பெறுவார்கள். சிலர் வீடு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஓரளவு பணம் கைக்கு வரும். புதிய வீடு கட்டுவதற்கு கடன் கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.
ரிஷபம் - தம்பதியரிடையே அன்பு அதிகரிக்கும். பணம் பாக்கெட்டை நிரப்பும். உறவினர்களின் வருகை இருக்கும். அவர்களால் மகிழ்ச்சியும் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவார்கள். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். கூட்டு வியாபாரிகளுக்கு லாபம் உயரும். தேகம் பொலிவுடன் காணப்படும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
மிதுனம் - கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். புதிய வீடு கட்டுவதற்கு கடன் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சில்லறை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். மகான்கள் மற்றும் சித்தர்களின் ஆசி கிடைக்கும். பங்குச் சந்தை மூலம் பணம் வர வாய்ப்புள்ளது. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மஞ்சள்.
கடகம் - சமூகத்தில் அவர்களின் அந்தஸ்து உயரும். தங்கள் பெண்ணுக்கு நல்ல துணை அமையும். பிள்ளைகளின் ஆசிரியர் அவர்களின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுவார்கள். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வார்கள். வேலை தேடுபவர்களுக்கு நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
சிம்மம் - புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் அடைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். உறவினர்களின் வருகை இருக்கும். தாய்-மகன் அன்பு பலப்படும். பிரபல பங்குச் சந்தை மூலம் பணம் வர வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கன்னி - வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாகப் பேச வேண்டாம். தம்பதியரிடையே அன்பு பெருகும். வீடு வாங்குவதற்கு கடன் கிடைக்கும். வெளிநாடு செல்ல திட்டமிடுவார்கள். முக்கிய விழாவிற்கு தலைமை ஏற்பார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பொன் நிறம்.
துலாம் - நட்பு வட்டம் விரிவடையும். பழைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நடக்கும். வியாபாரம் செழிக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். பணப் புழக்கம் அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.
விருச்சிகம் - உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு ஒரு திருப்பம் உண்டாகும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் தேவை. பழைய வீட்டைச் சீர் செய்வார்கள். உங்கள் வீட்டில் பணிபுரிபவர்கள் உண்மையாக இருப்பார்கள். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உடல் நலம் சிறக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
தனுசு - இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியத் தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.
மகரம் - அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவார்கள். லாபத்தை அதிகரிப்பார்கள். தம்பதியரிடையே விட்டுக் கொடுப்பார்கள். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கரும் பச்சை.
கும்பம் - பணவரவுக்குப் பஞ்சமிருக்காது. நல்ல செய்தி கிடைக்கும். கலைஞர்களுக்கு அரசியலில் இருந்து அழைப்பு வரும். புகழ்பெற்றவர்களை சந்திப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அயல்நாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. கல்வியில் வெற்றி உண்டு. உடல் நலம் சிறப்படையும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
மீனம் - சகோதரர் வருகை உண்டு. ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். விலை உயர்ந்த பொருட்கள் கைக்கு வந்து சேரும். நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்த சிரமங்கள் நீங்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கடல் நீலம்.
திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு
கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?
இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)
தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?
திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை
பொம்மையம்மா.. பொம்மை!
நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!
{{comments.comment}}