12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜனவரி 06, 2026... இன்று நினைத்தது நிறைவேறும்

Jan 06, 2026,10:38 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2026 ஆம் ஆண்டு ஜனவரி 06 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், மார்கழி 22 ம் தேதி செவ்வாய்கிழமை

சங்கடஹர சதுர்த்தி. இன்று பகல் 12.16 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. மாலை 04.37 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : 01.30 முதல் 02.30 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை 


சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - அரசு தொடர்பான விஷயங்களில் லாபம் கிடைக்கும். புதிய பதவி தேடி வரும். உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். கலைஞர்களுக்குப் பாராட்டுகள் குவியும். வீடு, மனை விற்பனை மூலம் லாபம் உண்டாகும். தம்பதியினர் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்திக் கொள்வார்கள். பத்திரிகைத் துறையில் இருப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஊதா.


ரிஷபம் - முடிவெடுப்பதில் இருந்த தயக்கம் நீங்கும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். பேச்சுத் திறமையால் லாபம் அடைவார்கள். கணவன்-மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், கமிஷன் தொழிலில் பணம் வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


மிதுனம் - அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். வெளிநாட்டுச் செய்திகள் மகிழ்ச்சியைத் தரும். ஜாமீன் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. பெண்கள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்குவார்கள். குடும்பப் பிரச்சனைகள் சீராகும். வரவேண்டிய பதவி தேடி வரும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.


கடகம் - பெண் அரசியல்வாதிகள் புகழ் மற்றும் கௌரவம் உயரும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய ஏஜென்சி எடுப்பார்கள். வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு குறையும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


சிம்மம் - வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தான் விரும்பிய பெண்ணை நிச்சயம் செய்வார்கள். பிரபலங்களின் மூலம் ஆதாயம் அடைவார்கள். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை உயரும். உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். மார்க்கெட்டிங் பிரிவில் இருப்பவர்களுக்கு கூடுதல் அலைச்சல் இருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


கன்னி - கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும். நிர்வாகத் திறமையால் பதவி உயர்வு பெறுவார்கள். வெளிநாட்டுப் பயணம் பயன் தரும். பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். அரசாங்க வழிகளில் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்குப் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


துலாம் - உத்தியோகத்தில் மதிப்பு கூடும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பிள்ளைகளை நல்ல பாதையில் வழிநடத்துவார்கள். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். காதல் மலரும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


விருச்சிகம் - பங்குச் சந்தை லாபம் தரும். தடைப்பட்ட காரியங்கள் நல்ல முறையில் முடியும். சிலருக்குக் காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடக்கும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


தனுசு -  இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் இறைவனை மட்டும் பிரார்த்தனை செய்வது நல்லது. பல காரியத் தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஊதா.


மகரம் - கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளிநாட்டுத் தொடர்புகள் லாபத்தை அள்ளிக் கொடுக்கும். தொலைதூர ஆலயங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டு. பணவரவு சற்று தாமதமானாலும் சம்பளம் வந்து சேரும். நட்பால் ஆதாயம் கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


கும்பம் - தொழிலில் அலட்சியப் போக்கு நீங்கும். வேலையாட்களால் உதவிகள் கிடைக்கும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். உங்கள் வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பல் வலி, மூட்டு வலி வந்து போகும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஊதா.


மீனம் - மூதாதையர் சொத்து கைக்கு வந்து சேரும். நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும். மகளுக்குப் படிப்பில் ஆர்வம் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

news

ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு

news

ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்

news

ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

news

அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக

news

விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்

news

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

news

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்

news

தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்