12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 25, 2025... இன்று திடீர் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள்

Nov 25, 2025,10:12 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு நவம்பர் 25 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், கார்த்திகை 09 ம் தேதி செவ்வாய்கிழமை

விவாஹ பஞ்சமி. இன்று இரவு 08.07 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இரவு 09.56 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.14 வரை மரணயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 08.15 முதல் 9 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் - மிருகசீரிடம், திருவாதிரை


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, உஷ்ண பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, குளிர்ந்த பொருட்களை உட்கொள்வது நன்மை தரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கைகூடும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் பெறுவார்கள். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும் என்பதால், சிக்கனமாக இருப்பது அவசியம். தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


ரிஷபம் - வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, இன்று நேர்காணல்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். உடல் நலனில் கவனம் தேவை. வெளி வட்டாரங்களில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இறைவனைப் பிரார்த்திப்பது நல்லது. பல காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால், புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது சிறந்தது. அதிர்ஷ்ட நிறம் பச்சை.


கடகம் - விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி தங்கள் விற்பனையை அதிகரிப்பார்கள். வெளிநாட்டு நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவி வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும். நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டு. சுப காரியங்கள் கைகூடும். ஆவணங்களைப் பத்திரமாகப் பாதுகாப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


சிம்மம் - வெளியூர் பயணங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை விட அதிகமாக லாபம் கிடைக்கும். திருமணம் மற்றும் கிரகப்பிரவேசங்களுக்கு அழைப்புகள் வரும். தம்பதியரிடையே அன்பு இரட்டிப்பாகும். அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்.


கன்னி - வியாபாரிகளுக்கு, புதிய முதலீடுகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால், சிக்கனமாக இருக்க வேண்டும். தம்பதியரிடையே ஒற்றுமை மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் கரும்பச்சை.


துலாம் -   ஜுஸ் மற்றும் எண்ணெய் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தம்பதியரிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இன்று குடும்பத்துடன் ஷாப்பிங் மாலுக்குச் செல்வது, திரைப்படம் பார்ப்பது போன்ற செயல்களில் நேரத்தைச் செலவிடுவீர்கள். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் கிரே.


விருச்சிகம் - பழைய நண்பர்களைச் சந்தித்து மனம் விட்டுப் பேசுவீர்கள். கடன் தொல்லைகள் நீங்கும். உடல் பொலிவுடன் காணப்படும். உடல் நலம் சிறக்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். உங்கள் துணை உங்களிடம் மன்னிப்புக் கேட்பார். திடீர் வெளியூர் பயணம் உண்டு. உறவினர்களைப் பார்த்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட நிறம் வான்நீலம்.


தனுசு -  மகான்கள் மற்றும் சித்தர்களின் ஆசி கிடைக்கும். உடல் பொலிவைக் கூட்டும் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். திட்டமிடாத செலவுகளைச் சமாளிக்கப் போராட வேண்டியிருக்கும். அதிர்ஷ்ட நிறம் பொன்னிறம்.


மகரம் - எதிர்பாராத ஒரு நல்ல செய்தி உங்களை வந்தடையும். நீங்கள் விரும்பிய வரனை மணப்பீர்கள். பெற்றோரின் சகோதர, சகோதரி வழியில் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளது. கொஞ்சம் விட்டுக்கொடுப்பது நல்லது. தியானம் மேற்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். உடல் நலத்தைப் பேணுவது அவசியம். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


கும்பம் - பிரபலங்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். அவர்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டு. விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சீராக நடைபெறும். தொலைந்து போன பொருள் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மூன்றாம் நபரால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்.


மீனம் - நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெற்றோரின் உடல்நிலை சீராகும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மை கூடும். தேகம் மின்னும். நட்பால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அயோத்தியில் கோலாகலம்.. ராமர் கோவில் கோபுரத்தில் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி

news

தென் மாவட்டங்களில் கன மழை.. சார் பணிகள் பாதிப்பு.. மக்கள் அவதி

news

சிந்திக்க வேண்டிய விஷயம்....!

news

அறிவுக்கு வேலை கொடு (சிறுகதை)

news

அன்பிற்கொரு அழுகை... உரிமைக்காய் ஒரு அழுகை..!

news

அரசனும் நான்கு மனைவியரும்.. முதல் மனைவியால் நெகிழ்ந்த மன்னன்.. குட்டிக் கதை!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 25, 2025... இன்று திடீர் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள்

news

நவ., 29ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் தகவல்!

news

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு.. ஜனாதிபதி முர்மு பதவிபிரமாணம் செய்து வைத்தார்

அதிகம் பார்க்கும் செய்திகள்