தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 27 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், கார்த்திகை 11 ம் தேதி வியாழக்கிழமை
சுபமுகூர்த்த நாள். இன்று இரவு 08.03 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இரவு 10.57 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.14 வரை மரணயோகமும் பிறகு இரவு 10.57 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, நீண்ட நாட்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த காரியங்கள் சாதகமாக அமையும். தொலைதூர புண்ணிய தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பிள்ளைப்பேறு உண்டாகும். தங்கள் கடையை புகழ்பெற்ற பகுதிக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு, இளைஞர்களுக்கு நல்ல பணி வாய்ப்புகள் கிட்டும். குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மனம் அமைதியைத் தேடும். உடன்பிறப்புகளுடன் பகைத்துக் கொள்ள வேண்டாம். பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நன்மை தரும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கடல்நீலம்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு, புதியவர்களின் அறிமுகம் நன்மையில் முடியும். மாணவர்களின் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவார்கள். அனாவசிய செலவுகளைக் குறைப்பது நல்லது. தொழில் அதிபர்கள் முதலீட்டை அதிகரிப்பார்கள். நவீன வாகனம் வாங்க கடன் கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.
கடகம் - கடக ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இன்று சந்திராஷ்டமம். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியத் தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது சிறந்தது. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு, வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். கலைஞர்கள் பாராட்டுகளைப் பெறுவார்கள். தம்பதியர் ஒற்றுமையுடன் இருப்பார்கள். மாணவர்கள் கூடா நட்பை விலக்குவார்கள். மருத்துவர்கள் சாதனை படைப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கடன் தீரும். நண்பர்கள் விஷயத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, விளையாட்டில் வெற்றி தொடரும். தம்பதியரிடையே அன்பு நீடிக்கும். எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும். நண்பர்களின் மத்தியில் மரியாதை கூடும். சக ஊழியர்களிடம் முன் கோபத்தைத் தவிர்க்கவும். தாயின் உடல் நலம் சீரடையும். பிரிந்திருந்த காதலர்கள் ஒன்று சேர்வார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு, சிறு தூரப் பயணம் வெற்றி தரும். தம்பதியரிடையே அன்பு கூடும். பெண்களுக்கு அறியாமை விலகும். புதிய நட்பால் நன்மை உண்டாகும். பெற்றோரின் நீண்ட நாள் பிரச்சினை தீரும். பணவரவில் எந்தப் பங்கும் இருக்காது. அரசியல்வாதிகளுக்கு புகழ் ஓங்கும். வழக்கு வெற்றி காணும். உடல் நலம் மேம்படும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, தொழிலில் பொறுமையுடனும் உறுதியுடனும் இருப்பது நல்லது. இனிமையான சம்பவம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பிள்ளையின் திருமண விழா வெற்றி பெறும். நல்ல காரியம் ஒன்று எளிதில் முடியும். விசா முயற்சிகள் பலிதமாகும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கிரே.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு, கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரி இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வார். குடும்பப் பொறுப்பை உணர்ந்து நடப்பீர்கள். மார்க்கெட்டிங் பிரிவினருக்கு அதிக கமிஷன் கிடைக்கும். தம்பதியரிடையே மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் பொலிவும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஊதா.
மகரம் - மகர ராசிக்காரர்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். வேலையில்லாதவர்கள் விரும்பிய வேலையில் அமர்வார்கள். சிலருக்கு காதல் மலரும். விவசாயிகளுக்கு உதவி கிடைக்கும். அலுவலகத்தில் தங்கள் மதிப்பு உயரும். தாங்கள் விரும்பிய துறையில் சிறந்து விளங்குவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கிரே.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு, வழக்கு சாதகமாகும். பழைய கடனை அடைக்க மாற்று வழி பிறக்கும். தம்பதியர் வருவாயில் திட்டமிட்டு செயல்படுவார்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மாணவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தைப் பிடிப்பார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.
மீனம் - மீன ராசிக்காரர்கள் வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாள்வார்கள். பெற்றோர் தக்க சமயத்தில் உதவுவார்கள். தம்பதியர் விட்டுக் கொடுத்துச் செல்வார்கள். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மத்தியில் தங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பெரும் தொகை கைக்குக் கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு
விஜய்யுடன் கை கோர்த்த செங்கோட்டையன்.. அதிமுகவுக்கு குட்பை சொன்ன தவெக!
விஜய் முன்னிலையில் தவெக.,வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. பெரும் பொறுப்பு வெயிட்டிங்
சின்ன சின்ன பதம் வைத்து கண்ணன் வந்தான்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 27, 2025... இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்
Political Update: அதிமுக டூ தவெக.. விஜய்யை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்!
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நாளை தவெகவில் சேருகிறாரா?
புதுச்சேரியில் ரோடுஷோ நடத்தும் தவெக.. விஜய்யின் மாஸான மாஸ்டர் பிளான் இது தானா?
தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 1ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
Greyshark.. பார்க்க அப்படியே பென்குவின் மாதிரியே இருக்கும்.. ஆனால் மேட்டரே வேறப்பா!
{{comments.comment}}