12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 04, 2025... இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் ராசிகள்

Nov 04, 2025,10:24 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு நவம்பர் 04 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஐப்பசி 18 ம் தேதி செவ்வாய்கிழமை

இன்று இரவு 09.42 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. காலை 11.42 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை 

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, குடும்பத் தலைவிகள் உறவினர்களின் வீட்டு விசேஷங்களுக்காக வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். உடல் பொலிவு பெறும். சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் ஊதா.


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்களுக்கு, பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். அதில் ஒரு பகுதியை விற்று கடனை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். தம்பதியரிடையே சிறு வாக்குவாதங்கள் வரலாம், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கடன் சுமையைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு, உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்களின் உதவியால் அதை முடித்து விடுவார்கள். தம்பதியரிடையே அன்பு பலப்படும். பண வரவு தாமதப்படலாம். வியாபாரத்தில் உள்ளவர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு, கணவர் தங்கள் பேச்சைக் கேட்பார். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மாமியார் உடல் நலம் தேறும். வீட்டுச் செலவுகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஆனாலும், தொழிலில் நல்ல பண வரவு இருக்கும். பணப் பற்றாக்குறை விலகும். அவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் நீலம்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு, எதிர்காலத் தேவைகளை உணர்ந்து அதற்காக சிறு தொகையை சேமிப்பார்கள். கணவர் வழி உறவினர்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள். தம்பதியரிடையே அன்பு பெருகும். இருவரும் இணைந்து முடிவுகளை எடுப்பார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் பச்சை.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியத் தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. அவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு, பணப்புழக்கம் இருக்கும். அதில் ஒரு பகுதியை சேமிக்கத் தொடங்குவார்கள். உறவினர்கள் வந்து போவார்கள். புதுமண தம்பதியரிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டுக் கொடுத்து செல்வதும், மௌனத்தைக் கடைப்பிடிப்பதும் நல்ல புரிதலை உருவாக்கும். அவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் ஊதா.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, பிள்ளைகள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சி செய்வார்கள். அரசியலில் நல்ல பொறுப்பு வழங்கப்படும். தம்பதியரிடையே சிறு வாக்குவாதங்கள் வந்தால் கூட விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு, எதிர்பார்த்த கல்வி நிறுவனங்களில் கவுன்சிலிங் மூலம் இடம் கிடைக்கும். தாயார் வீட்டிற்குச் சென்று அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு, உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பார்கள். காதல் மலரும். பிள்ளைகள் நன்கு படிப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கூடும். வாகனக் கடனில் ஒரு பகுதியை அடைப்பார்கள். சகோதர, சகோதரி வழிகளில் உதவிகள் கிடைக்கும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். அவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு, நினைத்த காரியத்தை முடித்து மகிழ்ச்சியடைவார்கள். பணப் பற்றாக்குறை இருக்காது. குடும்பத் தலைவர்களுக்கு அக்கம் பக்கத்தினர் உதவுவார்கள். குடும்பத் தலைவிகளுக்கு கை, கால் மூட்டுகளில் வலி ஏற்படலாம். இயற்கை வைத்தியரை அணுகுவது நல்லது. அவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் நீலம்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு, வியாபாரம் செழிக்கும். பெற்றோர்கள் தங்கள் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்வார்கள். உடல் நலம் சிறப்பாகும். திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு கனவு கண்டது போன்ற நல்ல துணை கிடைக்கும். தேக ஆரோக்கியம் மேம்படும். அவர்களுக்கு அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!

news

ஐப்பசி பெளர்ணமி.. சிவபெருமானுக்கு கூடுதல் சிறப்பு.. கார்த்திகை பெளர்ணமிக்கு நிகரானது!

news

உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

news

தங்கம் விலை நேற்று ஏறிய நிலையில் இன்று குறைந்தது... அதுவும் சவரனுக்கு ரூ.800 குறைவு!

news

கோவை துயரம் மனிதத்தன்மையற்றது.. கண்டிக்க கடுஞ்சொல் எதுவும் போதாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பேங்க் போக வேண்டிய வேலை இருக்கா.. தயவு செய்து 5ம் தேதி போகாதீங்க... இந்த மாநிலங்களில் லீவு!

news

கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 04, 2025... இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்