12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 04, 2025... இன்று பணவரவு அதிகரிக்கும்

Oct 04, 2025,11:23 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு அக்டோபர் 04 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், புரட்டாசி 18 ம் தேதி சனிக்கிழமை

சனிப்பிரதோஷம். உலக விலங்குகள் தினம். பகல் 02.38 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. காலை 07.22 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 07.22 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை 

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்




இன்றைய ராசிபலன் :


மேஷம் - வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வீடு வாங்குவதற்கு இது ஒரு நல்ல காலம். உங்கள் பிள்ளைகளின் ஆசிரியர்கள் அவர்களின் புத்திசாலித்தனத்தை பாராட்டுவார்கள். காதலர்கள் தங்கள் கடமைகளை உணர்வார்கள். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். உங்கள் மகளுக்கு நல்ல வரன் அமையும்.


ரிஷபம் -  தடைபட்ட காரியங்கள் நல்ல விதமாக முடிவடையும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். நண்பர்களின் வீட்டு விசேஷங்களை நீங்கள் முன்னின்று நடத்துவீர்கள். மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுப்பார்கள்.


மிதுனம் - பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாது. பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்த சிரமங்கள் நீங்கும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். உங்கள் மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.


கடகம் - இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால், பயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அந்த பயணங்களால் பெரிய நன்மை இருக்காது. இதனால் நேரமும் பணமும் வீணாகலாம். எனவே, இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உங்கள் உடல் நலத்தில் கவனம் தேவை.


சிம்மம் - காதல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள். பிரபலமான பங்குச் சந்தை மூலம் உங்களுக்கு பணம் வரும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நீங்கள் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெறுவார்கள்.


கன்னி - உங்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். காதல் விவகாரங்களில் அவசரம் வேண்டாம். பெற்றோரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள். வேலையாட்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். இடுப்பு வலி, மூட்டு வலி வந்து போகலாம்.


துலாம் -   சிலருக்கு காதல் திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் முடியும். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகலாம். கலைத்துறையினருக்கு தடைபட்டிருந்த உங்கள் படைப்புகள் வெளியாகும். வெளிநாட்டுப் பயணம் உங்களுக்கு பயன் தரும். 


விருச்சிகம் - அரசாங்க வகைகளில் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளின் தொல்லைகள் அகலும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும். உங்கள் நிர்வாகத் திறமையால் பதவி உயர்வு கிடைக்கும்.


தனுசு -  முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதமாக முடியும். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அதனால் வேலைச்சுமை அதிகமாகும்.


மகரம் - சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வீட்டில் வேலையாட்களின் கோபத்தை காட்டாமல், அவர்களை தட்டிக் கொடுப்பது நல்லது. மார்கெட்டிங் பிரிவினர் புதிய ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவைப்படும்.


கும்பம் -  இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். ஆன்மிகத்தில் உங்களுக்கு நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.


மீனம் - பெண்களுக்கு சளி தொந்தரவு வந்து போகும். உங்கள் தொழிலில் உங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். பெரிய அளவில் பிரச்சனை இல்லை. அரசாங்க வேலை உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உங்கள் தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவத்தில்.. விஜய் மட்டுமே முதன்மைக் குற்றவாளி அல்ல.. அண்ணாமலை பேச்சு

news

கரூர் சம்பவம்..ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்..முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

விஜய்யிடம் நிறைய நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள்.. தலைவர்கள்தான் அர்ஜென்ட்டாக தேவை!

news

நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்து வரும் தங்கம் விலை... இன்று காலையிலேயே உயர்ந்தது!

news

ஓமன் வாழ் தமிழர்கள் கவனத்திற்கு.. மஸ்கட்டில் தமிழ்நாடு நாள்.. விதம் விதமான போட்டிகள்

news

அரபிக் கடலில் உருவான.. 2025ம் ஆண்டின் முதல் புயல்.. அச்சுறுத்தும் சக்தி.. மும்பைக்கு எச்சரிக்கை!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 04, 2025... இன்று பணவரவு அதிகரிக்கும்

news

கச்சா எண்ணெய் இடத்தைப் பிடித்த தங்கம்.. எதில் தெரியுமா.. அதிர வைக்கும் தகவல்!

news

எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைக்கும் தவெக.. அதிமுக கூட்டணி உருவாகுமா.. அப்ப பாஜக?

அதிகம் பார்க்கும் செய்திகள்