12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 05, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Dec 05, 2024,09:51 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 05 ம் தேதி, வியாழக் கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய பஞ்சாங்கம் :

குரோதி வருடம், கார்த்திகை 20 ம் தேதி வியாழக்கிழமை
சதுர்த்தி, திருவோண விரதம், சுபமுகூர்த்த நாள். இன்று பகல் 12.24  வரை சதுர்த்தி, அதற்கு பிறகு பஞ்சமி. மாலை 05.27 வரை உத்திராடம், பிறகு திருவோணம். காலை 06.15 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை - 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : காலை 12.15 முதல் 01.15 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை 

சந்திராஷ்டமம் - மிருகசீரிஷம், திருவாதிரை

இன்றைய ராசிபலன் :



மேஷம் - தாயாரின் உடல்நிலையில் கவனம் அவசியம். குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி இருக்கும். தடையில்லாத பணவரவு கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

ரிஷபம் - மகிழ்ச்சியான நாள். அதிக அளவில் நன்மைகளை பெறுவீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூகத்திலும், பணியிடத்திலும் மதிப்பு, மரியாதை உயரும். தொழில் முயற்சிகள் சாதகமாக அமையும்.

மிதுனம் - செலவுகள் அதிகரிக்கும். அதிகப்படியான செலவுகள் மன வேதனையை அளிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

கடகம் - மன மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். வாழ்க்கை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியது. சில சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம் - மனதில் குழப்பம் ஏற்படும். பெற்றோரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். 

கன்னி - பேச்சில் இனிமை அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உருவாகும்.

துலாம் - குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பணவரவு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் உருவாகும்.

விருச்சிகம் - சில தொல்லைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிலருக்கு பெற்றோரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் ஏற்படும்.

தனுசு - வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். சில பணிகளுக்காக அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மனதில் குழப்பம் ஏற்படலாம்.

மகரம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலை, இசை துறையில் முன்னேற்றம் ஏற்படும். நண்பரின் உதவியால் புதிய வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் விரிவுபடுத்த சூழல் ஏற்படும்.

கும்பம் - மகிழ்ச்சியான நாளாக அமையும். நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம் - அனுகூலமான நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நிதி தொடர்பான முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

news

வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?

news

CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்

news

4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்

news

பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!

news

ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?

news

பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?

news

14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்