தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 05 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. வளர்பிறை சஷ்டி. இரவு 09.11 வரை சதுர்த்தி, பிறகு சப்தமி. இரவு 09.28 வரை பூரட்டாதி, பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளது. காலை 06.31 வரை மரணயோகம், பிறகு இரவு 09.28 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - சாதகமான நல்ல பலன்கள் கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் உடல்நிலை மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வழிகள் பிறக்கும்.
ரிஷபம் - மனம் பல விதங்களில் குழப்பம் அடையும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சில முக்கிய திட்டங்களில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் உயர்வு ஏற்படும். அலைச்சலுக்கு பிறகு லாப வாய்ப்புகள் அமையும். செலவுகளும் அதிகரிக்கும்.
மிதுனம் - பேச்சில் இனிமை கூடும். குடும்ப உறுப்பினர்களால் சில சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். இதனால் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டி இருக்கலாம்.
கடகம் - சுமாரான நாளாக இருக்கும். மனநிலையில் குழப்பங்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பணியிடத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம் - ஆற்றல் அதிகரிக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி தரும். கல்வி பணியில் வெற்றி கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைப்பீர்கள்.
கன்னி - முன்னேற்றமான நாளாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பணிகளை உரிய நேரத்தில் முடிப்பீர்கள். வேலை தொடர்பான பயணங்கள் ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இதனால் புரிதல் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும்.
துலாம் - குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். பதற்றத்தை தவிர்ப்பது நல்லது. வேலைப்பளு அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். பணத்தை திட்டமிட்டு செலவிடுவது நல்லது.
விருச்சிகம் - முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் சுற்றி இருப்பவர்களால் பிரச்சனை ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் தலைவலி, தொண்டை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
தனுசு - சிறப்பான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவீர்கள். பணியிடத்தில் சாதகமாக சூழல் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இருவரிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். பணவரவு ஏற்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகரம் - இன்றைய நாள் சாதகமாக இருக்காது. மனதில் குழப்பமும், வருத்தமும் அதிகரிக்கும். பணியிடத்தில் இறுக்கமான சூழ்நிலை ஏற்படலாம். மறை முக எதிர்ப்புகள் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் செமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
கும்பம் - கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிலும் பொறுமையுடன் இருக்க வேண்டும். பணிகளை அதிக கவனமுடன் இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும். இதனால் கடன் வாங்க நேரிடலாம்.
மீனம் - சுமாரான நாளாக இருக்கும். பணியிடத்தில் நல்ல சூழல் நிலவும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பயணம் ஏற்படலாம். பணம் தொடர்பான விஷயங்களில் கவனம் அவசியம். பணப் புழக்கம் குறையும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}