12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 06, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Dec 06, 2024,10:13 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய பஞ்சாங்கம் :

குரோதி வருடம், கார்த்திகை 21 ம் தேதி வெள்ளிக்கிழமை
சஷ்டி. இன்று காலை 11.14  வரை பஞ்சமி, அதற்கு பிறகு சஷ்டி. மாலை 04.50 வரை திருவோணம், பிறகு அவிட்டம். காலை 06.15 வரை சித்தயோகம், பிறகு மாலை 04.50 வரை மரணயோகம், அதற்கு பிறகு சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை - 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 12.15 முதல் 01.15 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை 

சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்

இன்றைய ராசிபலன் :



மேஷம் - செலவுகளில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது நன்மையை தரும். அலுவலகத்திலும், வீட்டிலும் கோபப்பட வாய்ப்புள்ளது. இன்று அமைதி காப்பது வீண் பிரச்சனைகளில் சிக்குவதை தவிர்க்கும். 

ரிஷபம் - உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் வேகத்தை தவிர்த்து, விவேகமாக செயல்படுவது நல்லது. பணிகள் தாமதப்படும் என்பதால் எதையம் திட்டமிட்டு செய்வது சிறப்பு. சிலர் அதிர்ச்சி தரும் தகவல்களை கொண்டு வரலாம். எச்சரிக்கையாக இருங்கள்.

மிதுனம் - வேலை பளுவால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இயந்திர பழுதுகளுக்காக பணத்தை செலவிட வேண்டி வரும். மற்றவர்களுடன் மனம் விட்டு பேசுவது நல்லது. பேச்சுக்களை குறைத்துக் கொள்வதால் மனஅமைதி பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம். பழைய முதலீடுகள் நஷ்டத்தை தர வாய்ப்புள்ளது.

கடகம் - மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உங்களுக்கு யாராவது பணம் கொடுத்து உதவுவார்கள். திடீரென மனநிலையில் மாற்றம் ஏற்படலாம். அலுவலகத்தில் மற்றவர்களுடன் பேச்சை குறைப்பது நல்லது. உங்களின் நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவிடுவதால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

சிம்மம் - நண்பர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். மற்றவர்களிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் குடும்பத்தாரின் கருத்தை கேட்பது சிறப்பு. அன்பானவர்களிடம் கடுமையான சொற்களை பயன்படுத்தாமல் இருங்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதால் மனம் மகிழ்ச்சி அடையும். குடும்பத்தில் மற்றவர்களின் தலையீட்டை தவிர்க்க வேண்டும்.

கன்னி - நேர்மறையான, நம்பிக்கையான பேச்சுக்களால் மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். அன்புக்குரியவர்களால் மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கலாம். குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காதல் நினைவுகள் அதிகரிக்கலாம்.

துலாம் - எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். உறவினர்களின் ஆதரவால் நீண்ட நாட்களாக மனதை அழுத்திய பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். துணிச்சலான சில முடிவுகள் சாதகமான பலன்களை தரும். குடும்ப உறவுகளுடன் கருத்து மோதல்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம் - தேவையற்ற சிந்தனைகள் வந்து போகும். பணவரவு ஏற்படலாம். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வேலைகள் மனதிற்கு சோர்வை அளித்தாலும், வாழ்க்கை துணையின் ஆதரவு ஆறுதலை தரும். உங்கள் பேச்சிற்கு மரியாதை கூடும். பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். சுறுசுறுப்பான நாளாக இருக்கும்.

தனுசு - நீண்ட காலமாக கஷ்டப்படுத்திய நோயில் இருந்து விடுபடுவீர்கள். சுயநலவாதிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். கூடுதலாக பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் பிறக்கும். அறிவுத்திறன், நகைச்சுவை குணம் மற்றவர்களால் பாராட்டப்படும். யாராக்கும் அவசரப்பட்டு வாக்குறுதி தர வேண்டாம். வாழ்க்கையின் அதீத அன்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.

மகரம் - சுற்றுலா, விசேஷங்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வாய்ப்புகள் தேடி வந்தாலும் சிந்தித்து முடிவு எடுங்கள். குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அனுபவசாலிகளின் வார்த்தைகள் பலன் தரும். எதையும் கூர்ந்து கவனிக்கும் தன்மை அதிகரிக்கும்.

கும்பம் - வேலைகள் லாபம் தருவதாக இருக்கும். பாதுகாப்பு பற்றிய சிந்தனை மனதை கவலையடைய வைக்கும். ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். நிதி விவகாரத்தில் மற்றவர்களின் ஆலோசனையை பெறுவது சிறப்பு. எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. பிடித்த விஷயங்களில் மனதை செலுத்துவீர்கள். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். 

மீனம் - குடும்பத்தை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். லாபம் கிடைக்கும். யாரையும் நம்பி முக்கிய பொறுப்புக்களை ஒப்படைக்காமல் இருப்பது நலம். மனதிற்கு விருப்பமானவரை சந்திக்கலாம். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் பொறுமையாக பேசுவது நல்லது. உற்சாகமான அனுபவங்களை பெறுவீர்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்