12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 06, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

Nov 06, 2025,10:22 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு நவம்பர் 06 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஐப்பசி 20 ம் தேதி வியாழக்கிழமை

கிருத்திகை. கரிநாள். இன்று மாலை 05.08 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 08.39 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 08.39 வரை சித்தயோகமும், பிறகு  மரணயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை 

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் - அஸ்தம், சித்திரை


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உத்யோகத்தில் மதிப்புக் கூடும். சுபநிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடக்கும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பொது சேவையில் இருப்பவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும். புதிய தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் வரும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்கள் வீட்டினை அழகாக கட்டி முடிப்பார்கள். மார்க்கெட்டிங் பிரிவில் இருப்பவர்களுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். வீடு கட்டுவதற்கு கடன் வசதி கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு சுபகாரியங்கள் நடக்கும். வியாபாரத்தில் மனைவி ஒத்துழைப்பு கிடைக்கும். மார்க்கெட்டிங் பிரிவில் இருப்பவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வது நல்லது. உடல் நலம் நன்றாக இருக்கும். பணம் தாராளமாக வரும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கிரே.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். மாணவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பிடித்த வரன் அமையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதியான சூழல் நிலவும். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசியல்வாதிகளின் எண்ணங்கள் நிறைவேறும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


கன்னி - கன்னி ராசிக்காரர்கள் வியாபாரத்திற்காக நீண்ட தூர பயணம் மேற்கொள்வார்கள். தங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண கனவு நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். பாதியில் நின்ற கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணிகள் முழுமையடையும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் இறைவனை மட்டும் பிரார்த்தனை செய்வது நல்லது. இன்று பல காரியங்களில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கிளிப்பச்சை.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு உத்யோகத்தில் கீழ் பணிபுரிபவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். இது சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவியாக இருக்கும். உறவினர்கள் உதவுவார்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் ஏற்படலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு கையிருப்பு அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழில்கள் சிறப்படையும். வியாபாரிகள் வேறு ஒரு புதிய பொருளை விற்பனை செய்ய முயற்சிப்பார்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். ஆரோக்கியம் மேம்படும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு உறவினர்களால் நன்மை உண்டாகும். பொதுத் துறையில் இருப்பவர்களுக்கு அவர்களின் சொல்லுக்கு மதிப்புக் கூடும். வியாபாரத்திற்கு வங்கிக் கடன் கிடைக்கும். ஆன்மீகப் பணிகள் சிறக்கும். காசி, கயா போன்ற இடங்களுக்கு யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கிரே.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உத்யோகத்தில் வேலைப் பளு குறையும். தம்பதிகளிடையே கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் சென்றால் அனைத்து நன்மைகளும் உண்டாகும். பெண்களின் சேமிப்பு உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஊதா.


மீனம் - மீன ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவரை தேடிச் சென்று சந்திப்பார்கள். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். கணவரின் அன்புக்குரியவராக விளங்குவார்கள். தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வார்கள். உடல் நலம் பலம் பெறும். தம்பதிகளிடையே நல்ல புரிதல் உண்டாகும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

பீகாரில் விறுவிறுப்பான சட்டசபைத் தேர்தல்.. சுறுசுறுப்பான முதல் கட்ட வாக்குப் பதிவு

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

news

ஐப்பசி கிருத்திகை.. முருகனுக்கு உகந்த நாள்.. விரதம் இருந்தால் வேண்டியது கிடைக்கும்

news

சும்மா இருக்கும் மனம் தெய்வீகத்தின் பட்டறை/பணியிடம்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 06, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

news

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை இருக்குனு தெரியுமா... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட அரசு முன்வரவேண்டும்: திருமாவளவன்!

news

தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி.. 2026ல் தவெக வாகை சூடும்: விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்