12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 07, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Mar 07, 2025,10:35 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மார்ச் 07 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மாசி 23 ம் தேதி வெள்ளிக்கிழமை

பகல் 02.03 வரை அஷ்டமி, பிறகு நவமி திதி உள்ளது . காலை 04.37 வரை ரோகிணி  நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.25 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 9 முதல் 10 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


சந்திராஷ்டமம் -  சுவாதி, விசாகம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உடல் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.


ரிஷபம் - நெருக்கமானவர்களிடம் சிறு கருத்து வேறுபாடு ஏற்படலாம். வாகனம் தொடர்பாக செலவுகள் உண்டாகும். உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு நம்பிக்கையை தரும். வியாபாரத்தில் இருந்த தாமதங்கள் விலகும். வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்து செல்லவும்.


மிதுனம் - மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனதில் உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு பிறக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். இலக்குகளை அடைய முயற்சிப்பீர்கள். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்புக்களை அதிகரிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். 


கடகம் - புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்டு வந்த பணவரவு கிடைப்பதற்கான சூழல் அமையும். போட்டிகள் பற்றிய சந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனதில் பல விதமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். தொழிலில் சிந்தித்து செயல்பட வேண்டும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 


சிம்மம் - குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். பணவரவில் இருந்த இழுபறிகள் குறையும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதை உறுத்திய கவலைகள் குறையும். உத்தியோகத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.


கன்னி -  சகோதர வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்த வந்து மறைமுக எதிர்ப்புகள் விலகும். புதுவிதமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை தரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.


துலாம் -  உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எளிதில் முடியும் என நினைத்த காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். தவறிப் போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இழுபறியான வரவுகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.


விருச்சிகம் - திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் சிறு கருத்து வேறுபாடு ஏற்படலாம். எழுத்து துறை பணிகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகளால் மனவருத்தம் ஏற்படும். அக்கம்,பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும்.


தனுசு - உத்தியோக பணிகளில் மாற்றம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலை மறையும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாளாக இருக்கும்.


மகரம் - உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். விலகி இருந்தவர்கள் மூலம் சில சாதகமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.


கும்பம் -   புதிய முயற்சிகளில் அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். எதிலும் அவசரம் இல்லாமல் நிதானமாக செயல்படவும். பணிகளில் பொறுப்புகள் குறையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.


மீனம் - வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கும். பயணங்களில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாளாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

சுக்கிர பிரதோஷம்.. தேய்பிறை சுக்கிர பிரதோஷம் அதீத சிறப்புடையது!

news

ப்ளஸ் 1 பொதுத் தேர்வு... கணினி அறிவியல் பாடத்தில் கருணை மதிப்பெண் அறிவிப்பு!

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

news

Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?

அதிகம் பார்க்கும் செய்திகள்