12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 08, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Feb 08, 2025,05:03 PM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 08 ம் தேதி, சனிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், தை 26 ம் தேதி சனிக்கிழமை

ஏகாதசி. இரவு 09.55 வரை ஏகாதசி, பிறகு துவாதசி. இரவு 07.47 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும், பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை 

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை 

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  சுமாரான நாளாக இருக்கும். தேவையற்ற எண்ணங்களை தவிர்க்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் முயற்சிகளில் வெற்றி பெற வேண்டிய நாள். பணியிடத்தில் வேலை சுமை அதிகரிக்கும். மற்றவர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும். திடீர் பயணங்கள் ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் மோதல்கள் ஏற்படலாம். 


ரிஷபம் - பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. பணியிடத்தில் சிரமங்கள் அதிகரிக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.


மிதுனம் - கடின உழைப்பால் வெற்றி காண வேண்டிய நாள். பணிகளை திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பயனுள்ள செலவுகளாக மாற்றிக் கொள்வது நல்லது. அஜீரண பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 


கடகம் -   எதிலும் பொறுமையுடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டிய நாள். பணியிடத்தில் அதிக பணிகள் ஏற்படலாம். எதிலும் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவு குறையலாம். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.


சிம்மம் -  சாதாரண நாளாக இருக்கும். தனித்திறமை வெளிப்படும். வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டிய இருக்கும். அலுவலகம் தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கலாம். உணவு பழக்க வழக்கங்களில் கவனம் தேவை.


கன்னி -  தடைகளுக்கு பிறகு நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


துலாம் -   பொறுப்புகள் அதிகரிக்கலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் நிதான போக்கை கடைபிடிக்க வேண்டும். செலவுகளில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


விருச்சிகம் -  சிறப்பான நாளாக இருக்கும். பொறுமையாக இருந்து பெருமை காண வேண்டிய நாள். தைரியமான செயல்பாடுகளால் பணிகளில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பண வரவு சுமாராக இருக்கும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


தனுசு - நன்மை தீமைகள் கலந்த நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் கவனமாக செயல்பட வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். பணவரவு குறையலாம். குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.


மகரம் -  சாதகமான நாளாக இருக்கும். தைரியமாக செயல்பட்டு வேலைகளில் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனம் அவசியம். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கலாம். பணத்தை சேமிப்பது கடினமாக இருக்கும். துணையின் ஆரோக்கியற்காக பணம் செலவிடுவீர்கள்.


கும்பம் -   பொறுப்புகள் அதிகரிக்கும். பணியிடத்தில் தடைகளை சந்திக்கலாம். நேர்மையான செயல்பாடு உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்யும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். செலவுகளில் எச்சரிக்கையுடன் இருப்பத நல்லது. ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.


மீனம் -   கவலையுடன் காணப்படுவீர்கள். செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். பணியாளர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்குவது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். சேமிப்பது கடினமானதாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்