தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு மே 09 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
விசுவாவசு வருடம், சித்திரை 26 ம் தேதி வெள்ளிக்கிழமை
மதுரை சித்திரை தேர்த்திருவிழா. சுபமுகூர்த்த நாள். மாலை 04.56 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. நாள் முழுவதும் அஸ்தம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகமும் , பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : 01.30 முதல் 02.30 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
சந்திராஷ்டமம் - சதயம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு தாமதமான சுபகாரியம் நடந்தேறும். பணம் தாராளமாக வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். வியாபாரத்தில் மனைவி உதவுவார். வீடு கட்டுபவர்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். மார்க்கெட்டிங் துறையினருக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வது நல்லது. உடல் நலம் நன்றாக இருக்கும்.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வீடு கட்ட கடன் கிடைக்கும். வீட்டினை அழகாக கட்டிமுடிப்பீர்கள். குடும்பத்தில் வெளிநபர்கள் தலையிட வேண்டாம். மார்க்கெட்டிங் துறையினருக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு அத்தியாவசிய தேவை நிறைவேறும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதியான போக்கே நிலவும். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் கனவு நனவாகும்.
கடகம் - கடக ராசிக்காரர்களை நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பிடித்த வரன் அமையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு பாதியில் முடங்கிய கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமை அடையும். வியாபாரிகள் நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். சற்று தங்களுடைய உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்ளவும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண கனவு நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு தம்பதிகளிடத்தில் நல்ல புரிதல் உண்டாகும். மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை எழுதி பார்ப்பது நல்லது. கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். விரும்பியவரை தேடி சென்று சந்திப்பீர்கள். வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். உடல் நலம் பலம் பெறும்.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். புதிய தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். பணம் நாலாப்பக்கம் வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் மதிப்பு கூடும். சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடக்கும்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு உத்யோகஸ்தர்களுக்கு கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அது முக்கிய முடிவுகள் எடுக்க உதவும். மருத்துவ செலவு உண்டு. உறவினர் உதவுவர். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் வேலை பளு குறையும். தம்பதிகளிடையே கொஞ்சம் விட்டுக் கொடுத்து சென்றால் அனைத்து நன்மைகளும் உண்டாகும். பெண்களின் சேமிப்பு உயரும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை கூடுமானவரை ஓட்டல் சாப்பாட்டை தவிர்ப்பது நல்லது.
மகரம் - மகர ராசிக்காரர்கள் வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். உறவினர்களால் நன்மை உண்டாகும். பொதுத் துறையில் இருப்பவர்களுக்கு தங்கள் சொல்லிற்கு மதிப்புக் கூடும். திடீர் பணவரவு உண்டு. ஆன்மீகப் பணிகள் சிறக்கும். காசி, கயா என தீர்க்க யாத்திரை செல்வதற்கு திட்டமிடுவர். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம் - கும்ப ராசிக்காரர்கள் சதயம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம். மேலும், தாங்கள் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இன்று அவிட்டம் மற்றும் நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய அனைத்துவிதமான காரியங்களை துவங்கலாம்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு பெண்களின் கையிருப்பு அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். வியாபாரிகள் வேறு ஒரு புதிய பொருளை விற்பனை செய்ய முயற்சிப்பார்கள். முன்கோபத்தை தவிர்க்கவும். ஆரோக்கியம் மேம்படும்.
ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து.. சென்னையில் நாளை பேரணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர்ச் சூழல் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் - பிசிசிஐ
திருச்சிக்கான புதிய பேருந்து நிலையம்.. பஞ்சப்பூரில் பிரம்மாண்டம்.. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
No Live coverage: மீடியாக்களே உணர்ச்சிவசப்படாதீங்க.. அடக்கி வாசிங்க.. மத்திய அரசு கோரிக்கை
பாகிஸ்தான் ஏவிய 50 டிரோன்களை தடுத்து அழித்த இந்தியா... வியாழக்கிழமை இரவு நடந்தது என்ன?
அதிரடித் தாக்குதலில் குதித்த இந்தியா.. பதட்டத்தில் பாகிஸ்தான்.. PSL 2025.. யூஏஇக்கு மாற்றம்!
மக்களே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.. சண்டிகரில் எச்சரிக்கை சைரன்!
மதுரையில் கம்பீரமாக வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம்..உணர்ச்சி வெள்ளத்தில் பக்தர்கள்
கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.. ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்!
{{comments.comment}}