12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 10, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரப் போகும் ராசிகள்

Nov 10, 2025,10:35 AM IST


தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு நவம்பர் 10 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஐப்பசி 24 ம் தேதி திங்கட்கிழமை

தேய்பிறை சஷ்டி. சுபமுகூர்த்த நாள். இன்று காலை 08.31 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. அதிகாலை 02.41 வரை திருவாதிரை நட்சத்திரமும், பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.09 வரை சித்தயோகமும், பிறகு  அமிர்தயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 09.15 முதல் 10.15 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை 

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வங்கிக் கடன் உதவி கிடைக்கக்கூடிய நாளாக அமையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. தம்பதியரிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். திருமணம் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் பச்சை.


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்களுக்கு தம்பதியரிடையே அன்பு இரட்டிப்பாகும். பிள்ளைகள் சொல்வதை கேட்பார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற கடின உழைப்பு தேவை. எங்கு சென்றாலும் செல்வாக்கு இருக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் ஊதா.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தம்பதியரின் அன்பு பலப்படும். நண்பர்களிடம் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு கிடைக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்கி லாபத்தை அதிகரிப்பார்கள். தம்பதியரிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவார்கள். பழைய வீட்டை சீர் செய்வார்கள். வீட்டில் பணிபுரிபவர்கள் உண்மையாக இருப்பார்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். உடல் நலம் சிறக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்பத் தலைவிகள் தங்கள் விருப்பப்படி கணவரிடம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி குவிப்பார்கள். நிலம், வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் ஊதா.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு கலைஞர்களுக்கு உற்சாகம் கூடும் நாள். பெரிய நிறுவனங்களிடமிருந்து அழைப்பு வரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. உயர் பதவியும் கிடைக்கும். பிள்ளைச் செல்வம் இல்லாத குறை இனி கவலை வேண்டாம். அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் கிளிப்பச்சை.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத் தலைவிகள் சுதந்திரமாக செயல்படுவார்கள். ஆரோக்கியம் மேம்படும். வாகனம் பழுதடைந்தால் அதை சரி செய்வார்கள். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். வியாபாரிகளுக்கு நல்ல விற்பனை உண்டு. எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் கடல் நீலம்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியத் தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவார்கள். வயிறு உபாதை இருக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும். காதலர்கள் தங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும். மாணவர்கள் அதிகம் மதிப்பெண் பெற இன்னும் முயற்சி தேவை. இவர்களது அதிர்ஷ்ட நிறம் நீலம்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். தம்பதிகளிடையே அன்பு பெருகும். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. உடல் நலத்தில் முன்னேற்றம் கூடும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு தம்பதிகளிடையே வாக்குவாதம் வந்து போகும். பிள்ளைகள் சொல்வதை கேட்பார்கள். வியாபாரிகள் அரசு வகையில் ஆதாய பலன் பெறுவார்கள். உடல்நிலை சீராக இருக்கும். தொழிலதிபர்கள் தொழிலில் புதிய நவீன நுட்பத்தை கையாள்வார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் பச்சை.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு தங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். அரசியல்வாதிகள் நாவடக்கமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பேச்சினால் விளைவுகளை சந்திக்க நேரிடும். பொறுமை அவசியம். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

துள்ளுவதோ இளமை புகழ் நடிகர் அபிநய் காலமானார்.. கல்லீரல் நோயால் மறைந்த சோகம்!

news

அதிமுக கூட்டணி.. வருவதற்கு யோசிக்கும் தவெக விஜய்.. எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்ன?

news

திமுகவை வீழ்த்த நினைத்தால்.. நடிகர் விஜய் இதை செய்ய வேண்டும்.. தமாகா தலைவர் ஜி கே வாசன் யோசனை

news

SIR.. தேர்தல் ஆணைய திட்டத்தை எதிர்த்து.. திமுக சார்பில் நாளை மாநிலம் தழுவிய போராட்டம்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 10, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரப் போகும் ராசிகள்

news

ஐப்பசி மாத தேய்பிறை சஷ்டி.. நல்ல ஆரோக்கியத்தையும் ஆன்மீக சக்தியையும் அளிக்கும்!

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

அதிகம் பார்க்கும் செய்திகள்