12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 10, 2025... சுப காரியங்கள் கைகூடும்

Oct 10, 2025,10:27 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், புரட்டாசி 24 ம் தேதி வெள்ளிக்கிழமை

சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை. உலக முட்டை தினம். உலக மனநல தினம். தேசிய தபால் தினம். அதிகாலை 03.02 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. அதிகாலை 12.30 வரை பரணி நட்சத்திரமும், பிறகு இரவு 10.51 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. இன்று அதிகாலை 12.30 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.01 வரை மரணயோகமும், பிறகு இரவு 10.51 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 01.45 முதல் 02.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


சந்திராஷ்டமம் - அஸ்தம், சித்திரை, சுவாதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் வெளியூர் பயணங்களுக்கு உகந்ததாக இருக்கும். புதிய ஏஜென்சி பொறுப்புகளை ஏற்பார்கள். வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்கள் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். பெண் அரசியல்வாதிகளின் புகழ் மற்றும் கௌரவம் உயரும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஊதா.


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் முன்னின்று செயல்படுவார்கள். தடைப்பட்ட காரியங்கள் நல்ல முறையில் நிறைவேறும். சிலருக்கு பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் நிகழும். வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. காதல் மலரும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவார்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் பெருகும். உடல் பொலிவு பெறும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்த சிரமங்கள் நீங்கும். நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. கல்வியில் வெற்றி பெறுவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு விலை உயர்ந்த பொருட்கள் கைக்கு வந்து சேரும். புகழ்பெற்றவர்களை சந்திப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். விவாதங்களில் வெற்றி பெறுவார்கள். பேச்சுத் தொழிலால் லாபம் ஈட்டுவார்கள். கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். ரியல் எஸ்டேட் மற்றும் கமிஷன் தொழிலில் பணவரவு இருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


கன்னி - கன்னி ராசிக்காரர்கள் பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவார்கள். பழைய வீட்டை சீரமைப்பார்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்கி லாபத்தை அதிகரிப்பார்கள். தம்பதிகளிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மேலோங்கும். வீட்டில் பணிபுரிபவர்கள் உண்மையாக இருப்பார்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். உடல் நலம் சிறக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


துலாம் -   துலாம் ராசிக்காரர்கள், குறிப்பாக சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, வாக்குவாதங்களில் ஈடுபடவோ கூடாது. சந்திராஷ்டமம் காரணமாக பொறுமை அவசியம். ராசிக்கு சந்திரன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் இந்த கவனம் தேவை. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு விவசாயப் பொருட்களுக்கு விலை ஏற்றம் இருக்கும். உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். மார்க்கெட்டிங் பிரிவினருக்கு கூடுதல் அலைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். தம்பதிகளிடையே அன்பு பெருகும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு பணவரவு சற்று தாமதமானாலும் சம்பளம் வந்து சேரும். நட்பால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் செழிக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் லாபம் ஈட்டுவார்கள். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். உடல் பலம் பெறும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக அமையும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஊதா.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பல் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் வந்து நீங்கும். வேலையாட்களின் உதவிகள் கிடைக்கும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். தங்கள் வட்டாரத்தில் மதிக்கப்படுவார்கள். பணவரவு சீராக இருக்கும். உடல் பொலிவு பெறும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


கும்பம் -  கும்ப ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பார்கள். உறவினர்களின் வருகை இருக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவார்கள். தாய்-மகன் அன்பு பலப்படும். பங்குச் சந்தை மூலம் பணம் வர வாய்ப்புள்ளது. புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் அடைவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஊதா.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழிலில் அலட்சியப் போக்கு நீங்கும். கணவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. புதியவர்கள் நண்பர்களாவார்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கும். மகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பணப் புழக்கம் அதிகமாகும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவம்... சிபிஐ.,க்கு மாற்றும் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

news

தவெக கொடிகளுடன் அதிமுக கூட்டங்களில் பங்கேற்போர் யார்.. இப்போதாவது சுதாரிப்பாரா விஜய்?

news

நடிகன் (சிறுகதை)

news

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை.. அமைதி நோபல் இவருக்குத்தான்!

news

கை விட்டுப் போகாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது ஏன்.. காங்கிரஸ் ஏதாவது திட்டம் தீட்டுதா?

news

பர்தா அணிந்து வரும் வாக்காளர்களைப் பரிசோதிக்க பெண் அதிகாரிகள்.. பீகார் தேர்தலில் உத்தரவு

news

அதிரடி காட்டி வந்த தங்கம் விலை இன்று சற்று குறைவு... வரலாற்றின் புதிய உச்சத்தில் வெள்ளி விலை...

news

காற்றாய் பறக்கும் கனவுகள்.. (மீண்டும் மங்கலம்.. மினி தொடர்கதை - 3)

news

அண்ணன் விநாயகருக்கான சங்கடஹர சதுர்த்தியும்.. தம்பி முருகனுக்கான கிருத்திகை விரதமும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்