12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 11, 2025... இன்று அன்பு பெருகும்

Sep 11, 2025,11:09 AM IST
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


விசுவாவசு வருடம், ஆவணி 26ம் தேதி வியாழக்கிழமை
மகாகவி நாள். மாலை 04.25 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இன்று மாலை 06.09 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு மாலை 06.09 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 

நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை

சந்திராஷ்டமம் - உத்திரம், அஸ்தம்




மேஷம் - ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். செலவுகள் அதிகமாகும். நண்பர்கள் உதவி செய்வார்கள். பிள்ளைகள் கேட்ட பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம் - வீடு கட்ட பணம் வரும். பண கஷ்டம் தீரும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். அதிகாரிகள் பாராட்டுவார்கள். பெரியவர்களிடம் பணிவாக இருங்கள். அண்டை வீட்டார்கள் உதவுவார்கள். எதிர்பாராத நன்மைகள் நடக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும்.

மிதுனம் - பிள்ளைகள் பெற்றோரின் ஆதரவுடன் முன்னேறுவார்கள். தம்பதிகளுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இரும்பு வியாபாரம் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்பவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வேலை வாய்ப்பு வரும். பெண்கள் வீட்டு செலவுகளை சமாளிப்பார்கள்.

கடகம் - அப்பா வழியில் சொத்து கிடைக்கும். கல்யாணம் மற்றும் கிரகப்பிரவேசத்தில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் பணம் அதிகமாக வரும். பிள்ளைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும். வரவேண்டிய பணம் இன்று வசூலாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள்.

சிம்மம் - வெளியூர் பயணம் வெற்றி தரும். சிறிய வியாபாரம் செய்பவர்களுக்கு விற்பனை அதிகரிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மாமியார் மற்றும் மருமகள் உறவு நன்றாக இருக்கும். வாகனத்தை சரி செய்ய செலவு அதிகமாகும். வண்டி ஓட்டும் போது கவனமாக இருங்கள். கால் மற்றும் கை மூட்டுகளில் வலி வரலாம்.

கன்னி - இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கடவுளை மட்டும் வழிபடுவது நல்லது. எந்த ஒரு புதிய முயற்சியும் எடுக்க வேண்டாம். யாரிடமும் சண்டை போட வேண்டாம். மன குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் ரொம்ப கவனமாக இருங்க.

துலாம் -   கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உங்களுடைய பூர்வீக சொத்து உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனமாக கையாளுங்கள். வீட்டை விற்று புதிய சொத்து வாங்குவீர்கள். மகன் சம்பந்தமாக நல்ல செய்தி கிடைக்கும்.

விருச்சிகம் - பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சின்ன சண்டை வரலாம். ஆனால் உடனே சரியாகிவிடும். வேலையில் உங்களுடன் வேலை செய்பவர்கள் உங்களை மதிப்பார்கள். எதிரிகள் உங்களிடம் சரணடைவார்கள். பத்திரிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். நிறைய கிளைகள் திறக்க திட்டம் போடுவீர்கள். பங்குச்சந்தையில் கொஞ்சம் கவனமாக இருங்க.

தனுசு -  சமூக சேவை செய்பவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். அக்கா மூலம் உதவி கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நிறைய வேலைகள் முடியும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கூடும். பழுதாகி இருந்த வண்டியை மாற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நல்ல புரிதல் ஏற்படும். முதுகு தண்டில் வலி வரலாம்.

மகரம் - சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். தள்ளிப்போன பணம் கைக்கு வரும். வரவேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வீடு மற்றும் நிலம் விற்பனை செய்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். உங்களுடைய வங்கி கணக்கில் பணம் அதிகரிக்கும். மருத்துவ செலவுகளும் வரலாம்.

கும்பம் -  நண்பர்களுடன் நல்ல சந்திப்பு இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் வரும். குழந்தைகள் முன்னேற்றம் அடைவார்கள். பியூட்டி பார்லர் ஆரம்பிக்க திட்டம் போடுவீர்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். வியாபாரம் செழிப்பாக இருக்கும். மார்க்கெட்டிங் செய்பவர்களுக்கு நிறைய ஆர்டர்கள் கிடைக்கும்.

மீனம் - வேலைப்பளு குறையும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். பணம் அதிகமாக வரும். செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டை புதுப்பிப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சிறப்பாக இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். உடல் வலி குறையும். கணவரிடம் அனுசரித்து போவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தியாகி இமானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

news

ஆடு, மாடு மாநாட்டை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும் : சீமான்!

news

நூறு சாமி.. விஜய் ஆண்டனி, சசி மீண்டும் கூட்டணி.. பழைய மேஜிக் ஒர்க் அவுட் ஆகுமா?

news

ஞானச்செறுக்கு நிறைந்த.. பாட்டுப் புலவன்.. முண்டாசுக் கவிஞன் .. பாரதியாரின் நினைவு நாள் இன்று!

news

பாமகவின் செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?

news

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!

news

தொடர்ந்து 3வது நாளாக மாற்றமின்றி இருந்து வரும் தங்கம், வெள்ளி விலை.... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 11, 2025... இன்று அன்பு பெருகும்

அதிகம் பார்க்கும் செய்திகள்