தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், பங்குனி 29ம் தேதி சனிக்கிழமை
பெளர்ணமி. அதிகாலை 04.12 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. மாலை 06.31 வரை அஸ்தம் நட்சத்திரம், பிறகு சித்திரை நட்சத்திரம் உள்ளது. காலை 06.04 வரை அமிர்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 04.30 முதல் 05.40 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - உடலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த வழக்குகள் முடிவுக்கு வரும். எதிர்ப்புகள் படிப்படியாக விலகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். இன்பம் நிறைந்த நாளாக இருக்கும்.
ரிஷபம் - விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். புதிய முதலீடுகளில் விழிப்புடன் செயல்படவும். சிந்தனையில் குழப்பம் காணப்படும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். ஆன்மிக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள்.
மிதுனம் - குடும்பத்தில் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். அதிரடியாக முடிவு எடுப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் நண்பர்கள் மூலம் கிடைக்கும். முயற்சிகளில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். தெளிவு பிறக்கும்.
கடகம் - சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறபட்ட முறையில் தீர்வு காண்பீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். பத்திர பதிவில் ஆதாயம் கிடைக்கும். உங்கள் வார்த்தைகள் மீதான மதிப்பு அதிகரிக்கும்.
சிம்மம் - குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை குறையும். அரசு தொடர்பான செயல்களில் ஆதாயம் அதிகரிக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி - பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்லவும். மறைமுக எதிர்ப்புகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
துலாம் - தாயின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். வியாபார விருத்திக்கான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் மனதளவில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். சிக்கல் நிறைந்த நாள்.
விருச்சிகம் - குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். பெருந்தன்மையான செயல்களால் செல்வாக்கு அதிகரிக்கும். பணியிடத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பரிவு வேண்டிய நாளாக இருக்கும்.
தனுசு - மனதில் புதிய பாதைகள் புலப்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். கணவன்-மனைவி இடையே புரிதல் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மகரம் - நட்பு வட்டம் விரிவடையும். உறவுகளிடம் பொறுமை வேண்டும். அதிர்ஷ்ட வாய்ப்புகளால் மாற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உறுதி அதிகரிக்கும் நாள்.
கும்பம் - நேரம் தவறி உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களிடம் சுமூகமாக பழகவும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகளை சமாளிப்பீர்கள். மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.
மீனம் - வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். சிந்தித்து செயல்படவும்.
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}