12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 12, 2025... இன்று நல்ல காலம் பிறக்க போகும் ராசிகள்

Nov 12, 2025,10:34 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு நவம்பர் 12 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஐப்பசி 26 ம் தேதி புதன்கிழமை

தேய்பிறை அஷ்டமி. இன்று காலை 04.46 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. அதிகாலை 01.03 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும்  சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, வீடு மற்றும் நிலபுலன்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். வங்கி கணக்கில் பணம் உயரும். சேமிப்பில் கவனம் தேவை. தாமதமாக வந்த பணம் கைக்கு வந்து சேரும். வர வேண்டிய சொத்து, பணம், நகை அனைத்தும் வந்து சேரும். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். இருப்பினும், மருத்துவ செலவுகளுக்கும் வாய்ப்புள்ளது. இவர்களது அதிர்ஷ்ட நிறம் நீலம்.


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்களுக்கு, வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். வரவேண்டிய பணம் இன்று வசூலாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களைத் தேடி வந்து பேசுவார்கள். தந்தைவழி சொத்து கைக்கு வரும். திருமணம் மற்றும் கிரகப் பிரவேசங்களில் முதல் மரியாதை கிடைக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு, வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். செலவுகள் சற்று கூடும். நண்பர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இவர்களது அதிர்ஷ்ட நிறம் ஊதா.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு, குழந்தைகள் முன்னேற்றம் அடைவார்கள். அழகு நிலையங்கள் ஆரம்பிக்க திட்டமிடுவீர்கள். நண்பர்களுடன் நல்ல சந்திப்பு உண்டு. ஆன்மீக சிந்தனை வரும். உடல் நலம் சிறக்கும். கணவன், மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். வியாபாரம் செழிக்கும். மார்க்கெட்டிங் பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு, புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். வாகன பராமரிப்பு செலவு சற்று அதிகமாகும். கவனமுடன் வாகனத்தை பயன்படுத்துவது நல்லது. கால், கை மூட்டுகளில் தேய்மானம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்களது அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, இரும்பு வியாபாரம் வருவாயை அதிகரிக்கும். கணினி துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்பு வரும். பெண்கள் வீட்டுச் செலவுகளை சமாளிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவார்கள். தம்பதியரிடையே மகிழ்ச்சி பொங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் கருநீலம்.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு, மூத்த அதிகாரிகள் பாராட்டுவார்கள். பெரியவர்களிடம் பணிவு தேவை. அண்டை வீட்டார்கள் உதவுவார்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத நன்மைகள் கிட்டும். எடுத்த காரியம் வெற்றியடையும். தன்னம்பிக்கை மிளிரும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, உத்யோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். எதிரிகள் சரணடைவார்கள். பத்திரிகையாளர்கள் பயன் பெறுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பல கிளைகள் துவங்க திட்டமிடுவீர்கள். பண வரவு மேம்படும். குடும்பத்தில் சிறிய வாக்குவாதம் வரலாம், ஆனால் அது உடனே மறைந்துவிடும். பங்குச் சந்தையில் சற்று கூடுதல் கவனம் தேவை. இவர்களது அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு, இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. இன்று பல காரியத் தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இவர்களது அதிர்ஷ்ட நிறம் நீலம்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு, பணப் பொறுப்புகளை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தம்பதியரின் அன்யோன்யம் கூடும். பூர்வீக சொத்தில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும். வீட்டினை விற்ற பணத்தைக் கொண்டு புதிய சொத்தினை வாங்குவீர்கள். மகன் சம்பந்தமாக இனிப்பான செய்தி கிடைக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு, புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பல காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பொதுநலத் தொண்டர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. தம்பதியரிடையே நல்ல புரிதல் உருவாகும். முதுகு தண்டில் வலி வந்துப் போகும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் பச்சை.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு, வீட்டை புதுப்பிப்பீர்கள். வெளிநாட்டுப் பயணம் சிறப்பாக அமையும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். மாணவர்களின் திறன் கூடும். உடல் வலி நீங்கும். கணவரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைப்பளு குறையும். உங்கள் வார்த்தைகள் மதிப்பு பெறும். பணம் பாக்கெட்டை நிரப்பும். செல்வாக்கு பெருகும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன்.. அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

news

தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது... இன்று சவரனுக்கு ரூ.800 குறைவு!

news

தங்கம் விலை உயர்வு: 2026ல் உலகப் பொருளாதாரம் சரியுமா.. பாபா வாங்காவின் கணிப்பு என்ன?

news

2026ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை.. பிளான் பண்ணி Fun பண்ணிக்கோங்க!

news

திடீரென மயங்கி விழுந்த நடிகர் கோவிந்தா.. மும்பை மருத்துவமனையில் அனுமதி

news

தர்மேந்திரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டிலேயே வைத்தியம் பார்க்க குடும்பத்தினர் முடிவு

news

பெங்களூரிலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி.. சின்னச்சாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் கிடையாது?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 12, 2025... இன்று நல்ல காலம் பிறக்க போகும் ராசிகள்

news

பீகார் தேர்தல் 2025: பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெறும்.. எக்ஸிட் போல் முடிவுகளில் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்