12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 14, 2025... இன்று நல்ல காலம் பிறக்கிறது

Nov 14, 2025,10:20 AM IST
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.

2025 ஆம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


விசுவாவசு வருடம், ஐப்பசி 28 ம் தேதி வெள்ளிக்கிழமை
குழந்தைகள் தினம். உலக சர்க்கரை நோய் தினம். இன்று காலை 04.38 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. அதிகாலை 01.06 வரை மகம் நட்சத்திரமும், பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. இன்று அதிகாலை 01.06 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 

நல்ல நேரம்: காலை 12.15 முதல் 01.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 01.45 முதல் 02.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, பிள்ளைகளால் சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். வெளி வட்டாரத்தில் அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை, குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு, உத்யோகத்தில் உங்கள் மதிப்பு கூடும். அண்ணன் மற்றும் தம்பி உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். புதிய வாகனம் வாங்குவது குறித்து திட்டமிடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகளிடம் நீங்கள் சொன்ன வாக்கை காப்பாற்றுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று நற்பெயர் வாங்குவார்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு, புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நீங்கள் உற்சாகம் அடைவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு, தடைப்பட்டிருந்த படைப்புகள் வெளியாகும். உங்கள் மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். உங்கள் வீட்டில் கூடுதல் அறை கட்டுவது அல்லது வீடு கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றி பெறும். உங்களை அனைவரும் வரவேற்பார்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு, உங்களிடமிருந்து விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து உங்களிடம் பேசுவார்கள். நீங்கள் பேசுவதற்கு மதிப்பு கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். திருமணம் தாமதமானவர்களுக்கு நல்ல விதத்தில் முடியும். சோர்வு நீங்கி உற்சாகம் அடைவீர்கள். உங்கள் உறவினர்கள் மற்றும் மனைவி வழி உறவினர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு, நீங்கள் இழந்த மரியாதையை மீண்டும் பெற்று விடுவீர்கள். நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள், மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவார்கள். உடலில் மாதவிடாய் பிரச்சனை தீரும். மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவார்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஊதா.

கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, பங்குச் சந்தை (ஷேர்) மூலமாக பணம் வர வாய்ப்புள்ளது. உங்கள் வசதிகளும் வாய்ப்புகளும் கூடும். நீங்கள் முயற்சி செய்யும் காரியம் முடியும் வரை அதை வெளியிடாமல் இருப்பது நல்லது. எதிர் வீட்டில் உள்ளவர்களுடன் இருந்த சண்டை சச்சரவுகள் விலகும். சில்லறை வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். மாணவர்கள் வேற்று மொழிகளைக் கற்க ஆர்வம் காட்டுவார்கள். உங்கள் உடல் நலம் சிறப்படையும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் கிரே.

துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு, உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவார்கள். வெளி வட்டாரத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். தொழில் அதிபர்கள் வருவாயைப் பெருக்க திட்டமிடுவார்கள். சரியான நேரத்தில் உணவு அருந்துவது உங்களுக்கு நன்மை தரும். வழக்கறிஞர்கள் பிரபலமாவார்கள். பணப் பிரச்சனை இருக்காது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, வெளி வட்டாரத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். உங்கள் முன்கோபத்தைத் தவிர்த்து விடுங்கள். வேலையாட்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். காதல் விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். இடுப்பு வலி, மூட்டு வலி வந்து போகும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு, புதிய வாடிக்கையாளர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்த சிரமங்கள் நீங்கும். பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். படிப்பில் உங்களுக்கு ஆர்வம் பிறக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்று மகிழ்வீர்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.

மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு, இன்று சந்திராஷ்டமம் என்பதால், இறைவனை மட்டும் பிரார்த்தனை செய்வது நல்லது. இன்று பல காரியங்களில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மிகவும் கவனமாக இருங்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு, அக்கம் பக்கத்தினருடன் உங்கள் தொடர்புகள் நன்றாக இருக்கும். கலைஞர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்கள் வழக்கு சாதகமாகும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு, சொத்து சம்பந்தப்பட்ட வழக்கை நிதானமாக கையாளுங்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க புதிய சலுகைகளை வழங்குவீர்கள். மனைவி வழியில் உங்களுக்கு உதவிகள் உண்டு. உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். மாணவர்கள் நற்பெயர் பெற்று பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நடிப்புக்கு என்ன சம்பளம் தெரியுமா.. அம்மாடியோவ்!

news

குழந்தைகள் தினம்.. நல்ல நல்ல பிள்ளைகளை உருவாக்கும் பெற்றோர்களுக்கும் முக்கியமான நாள்!

news

கூரைவீடும் வாழ்க்கையும்!

news

மணக்கும் மலர்கள்.. மயக்கும் மழலைகள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 14, 2025... இன்று நல்ல காலம் பிறக்கிறது

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!

news

மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சி தந்த அதிர்ச்சி!

news

பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்