12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

Oct 14, 2025,11:09 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், புரட்டாசி 28 ம் தேதி செவ்வாய்கிழமை

உலக தர நிர்ணய தினம். மாலை 04.40 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. மாலை 05.43 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.01 வரை அமிர்தயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 8 முதல் 9 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வியாபாரத்தை விரிவுபடுத்த புதிய யோசனைகள் தோன்றும். தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வார்கள். வர வேண்டிய பணம் வசூலாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் கனவுகள் பலிக்கும். அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறம் அமையும்.


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்களுக்கு உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பு கூடும். பணவரவுக்கு எந்த பஞ்சமும் இருக்காது. பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு தெம்பளிக்கும். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பங்களை கையாளுவீர்கள். தம்பதியினர் விட்டுக் கொடுத்து செல்வார்கள். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். அதிர்ஷ்ட நிறமாக நீலம் நிறம் அமையும்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு கடன் சுமை குறையும். பிள்ளைகளுக்காக சேமிக்க துவங்குவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அன்புக்குரியவரை சந்தித்து நீண்ட நேரம் உரையாடுவீர்கள். தம்பதியினர் சேர்ந்து குடும்பத்திற்காக சில தியாகங்களை செய்வீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு பங்கு கிடைக்கும். உடல் நலம் சுகம்பெறும். அதிர்ஷ்ட நிறமாக ரோஸ் நிறம் அமையும்.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நற்பலன்கள் நடக்கும். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முற்படுவார்கள். பங்காளிச் சண்டைகள் நீங்கி சமாதானம் அடைவீர்கள். பங்குச் சந்தை லாபம் தரும். உடல் நலம் சிறக்கும். அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறம் அமையும்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக பார்க்காத உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அதிர்ஷ்ட நிறமாக நீலம் நிறம் அமையும்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கூடும். ஆன்மீகச் சுற்றுலா சென்று வருவீர்கள். குடும்ப உறவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். தனியார் தொழில் அதிபர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பண விஷயங்களில் கவனம் தேவை. நண்பர்கள் உதவுவார்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெற்றோர்களது உடல் நலனை கவனிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறம் அமையும்.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். நண்பர்களிடமிருந்து நற்செய்தி கிடைக்கும். அரசியலில் இருப்போர் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பிரிந்த உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள். நிலம் வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறம் அமையும்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால், தாங்கள் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம். விசாகம் மற்றும் அனுஷம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் பணிகளை துவங்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறம் அமையும்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். காதலர்களுக்கு மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். பண உதவி கிடைக்கும். பெற்றோர் தங்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறம் அமையும்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு உறவினர்களால் நன்மை உண்டு. நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். உடல் வலிமை உண்டாகும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறமாக நீலம் நிறம் அமையும்.


கும்பம் -  கும்ப ராசிக்காரர்களுக்கு மூத்த சகோதரியால் நன்மை விளையும். மனதிற்கு பிடித்தவைகளை செய்வீர்கள். பணவரவில் பஞ்சமில்லை. சமூக ஆர்வலர்கள் சாதனைப் படைப்பர். தடைபட்ட வேலைகளை சட்டென்று முடிப்பீர்கள். தம்பதிகளிடையே அன்பு குறையாது. வீடு, மனை வாங்குவர். அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறம் அமையும்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். திருமணம் கோலாகரமாக நடக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அதிர்ஷ்ட நிறமாக பொன்னிறம் அமையும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

மக்கள் நலனுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த.. நிவேதிதா அம்மையார்!

news

வரலாற்று சாதனை பெற்று வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 2000த்தை நெருங்கியது

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்