12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்

Nov 15, 2025,10:24 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு நவம்பர் 15 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஐப்பசி 29 ம் தேதி சனிக்கிழமை

ஏகாதசி. இன்று காலை 04.55 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. அதிகாலை 01.51 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.13 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த சகோதரிகள் ஒன்று கூடுவார்கள். இதனால் உங்கள் தேகம் பளிச்சிடும். சுறுசுறுப்பு கூடும். அவசர தேவைக்காக நீங்கள் வாங்கிய கடனை அடைப்பீர்கள். உங்கள் மகள் மற்றும் மாப்பிள்ளை மூலம் உங்களுக்கு சௌகரியங்கள் கிடைக்கும். புதிய வீட்டில் குடிபுகும் யோகமும் உண்டு. உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை.


ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு, வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி தேவைப்படும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பெண்கள் சுய உதவிக்குழுவில் தலைமை தாங்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் குடும்ப விஷயங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சில சமயங்களில் உங்கள் சகோதரர் உங்களுக்கு உதவுவார். உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் தரும் நாளாக அமையும். சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமர்வார்கள். வியாபாரம் செழிப்படையும். காதலர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் கனவை நிறைவேற்றுவீர்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் கிரே.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு, வழக்குகள் மற்றும் பணப்பிரச்னை காரணமாக தடைபட்டு இருந்த கட்டிட வேலைகள் மீண்டும் இனிதே தொடங்கும். எந்த ஒரு விஷயமானாலும் தம்பதிகள் ஒன்று சேர்ந்து முடிவெடுப்பார்கள். பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து சொத்து, பணம் வரும். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஊதா.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு, பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் மற்றும் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். புதிய தொழில் துவங்குவதற்கு வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும். புதியதொரு வியாபாரத்தையும் நீங்கள் துவங்குவீர்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். காதல் விஷயங்களில் கசப்பு ஏற்படலாம். வழக்கறிஞர்கள் சாதனை படைப்பார்கள். பெண்களுக்கு நினைத்த வரன் அமையும். உங்கள் சொத்து பிரச்சினை இழுபறிகள் நீங்கி நல்ல முடிவினைத் தரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு, கொடுக்கல் வாங்கல் கை கொடுக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான காலம் வந்துள்ளது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். உங்கள் அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, பெண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்காமல் சற்று விட்டுக் கொடுத்து போவது நல்லது. தாயார் உடல்நலம் காரணமாக அலைச்சல் மற்றும் மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். மகன், மகள் திருமணத்தை தடபுடலாக நடத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் நன்கு முன்னேறுவார்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு, பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர் உங்களுக்கு உதவி புரிவார். சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கை கூடும். பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு, தம்பதிகள் ஒற்றுமை காப்பார்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நண்பர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பீர்கள். சகோதரி வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு, இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியத் தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு, பயணங்களின் போது கவனம் தேவை. உங்களது நீண்ட கால கனவான வீடு வாங்கும் முயற்சி பலித்துவிடும். மாணவர்கள் முயற்சி பலிக்கும். பங்காளிகளின் ஒற்றுமை கூடும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் கிரே.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்

news

பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!

news

தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?

news

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்

news

ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு

news

அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

news

இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்