தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், புரட்டாசி 29 ம் தேதி புதன்கிழமை
கரிநாள். உலக மாணவர் தினம். மாலை 03.24 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. மாலை 05.11 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, உடன்பிறந்தவர்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். வேலையாட்களிடம் அன்பாகப் பேசி வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்கள் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் உள்ளன. பெண்கள் விலை உயர்ந்த நகைகள் மற்றும் பொருட்களை வாங்குவார்கள். நண்பர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் வந்து போகும். இன்றைய அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு, பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிகள் பிறக்கும். பங்குதாரராக இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கக்கூடும். இன்றைய அதிர்ஷ்ட நிறம் கிரே.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு, சொந்தமாக வீடு அல்லது நிலம் வாங்கும் ஆசை அதிகரிக்கும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபாரம் சீராக நடைபெறும். புதிய கிளைகளைத் திறக்கும் யோகமும் உள்ளது. தந்தையின் ஆலோசனைகளைக் கேட்பது நன்மை தரும். இன்றைய அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள்.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு, மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நினைத்திருந்த நல்ல காரியங்கள் நடக்கும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உங்கள் ஆலோசனைகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். இன்றைய அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு, அரசு தொடர்பான காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். பிள்ளைகளின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களின் போது மற்ற சிந்தனைகளை ஒதுக்கி வைப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இன்றைய அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். பிள்ளைகள் மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கும். வீண் சந்தேகத்தாலும், ஈகோ பிரச்சனைகளாலும் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எனவே, இருவரும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்றைய அதிர்ஷ்ட நிறம் கருநீலம்.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு, பிள்ளைகளைத் தவறான பழக்கவழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். இனி உங்கள் அறிவுரைகளை அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள். இதுவரை சொந்த பந்தங்கள் மத்தியில் மனக்கசப்பையும், அவமானத்தையும் சந்தித்த நீங்கள், இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். பணவரவில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. இன்றைய அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, கட்சித் தலைமையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் கடையை மக்கள் அதிகம் கூடும் பகுதிக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நீங்கள் சந்திக்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதர சகோதரிகள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். இன்றைய அதிர்ஷ்ட நிறம் கடல்நீலம்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு, மூலம் மற்றும் பூராடம் நட்சத்திரக்காரர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இன்று பூராடம் மற்றும் உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படலாம். எனவே, இறைவனை மட்டும் பக்தியுடன் வணங்குவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும். இன்றைய அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு, வருமானம் உயரும். பற்களில் உள்ள பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுப்பீர்கள். உறவினர்கள் வந்து செல்வார்கள். தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். பிள்ளைகளால் உங்களுக்குப் பெருமை சேரும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. வியாபாரிகள் முன்னேற்றம் காண்பார்கள். வாகனத்தை வேகமாக ஓட்ட வேண்டாம். இன்றைய அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு, உத்யோகத்தில் உயர்வு உண்டு. உயர் பதவியும் கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகமாக இருந்தும், பிள்ளைச் செல்வம் இல்லாத குறை உங்களை பாதித்ததே, இனி கவலை வேண்டாம். அறிவு மற்றும் அழகுள்ள குழந்தை பிறக்கும். கலைஞர்களுக்கு உற்சாகம் கூடும் நாள். பெரிய நிறுவனங்களிடமிருந்து அழைப்புகள் வரும். இன்றைய அதிர்ஷ்ட நிறம் ஊதா.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு, குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சலுகைகள் மீண்டும் கிடைக்கும். உத்யோகம் முன்பை விட சாதகமாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பழைய கடன்கள் அடைபடும். இன்றைய அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!
நெருங்கும் தீபாவளி...தங்கம் வெள்ளி விலை எவ்வளவு உயர்வு தெரியுமா?
விண்வெளி நாயகா.. மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று!
மும்பை பங்குச் சந்தை.. உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம்.. அமெரிக்க பேச்சுவார்த்தை எதிரொலி
தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்
பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்
எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 15, 2025... இன்று மாற்றங்களை காண போகும் ராசிகள்
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
{{comments.comment}}