12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 17, 2025... இன்று கார்த்திகை சோமவார பிரதோஷம்

Nov 17, 2025,10:35 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு நவம்பர் 17 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், கார்த்திகை 01 ம் தேதி திங்கட்கிழமை

சோமவார பிரதோஷம். சர்வதேச மாணவர் தினம். இன்று காலை 06.53 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. காலை 04.49 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 04.49 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 09.15 முதல் 10.15 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - சதயம், பூராடம்


இன்றைய ராசிபலன் :


மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு நல்ல நாளாக அமையும். திடீரென பணம் வந்து சேரும். ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைந்து சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். வேலை செய்பவர்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.


ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்கள் இன்று மனைவியிடம் கோபப்படாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். உடல் உற்சாகத்துடன் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் நினைத்த வேலை கிடைக்கும். இரும்பு வியாபாரத்தில் லாபம் காணலாம். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் உள்ள கடன் பிரச்சினைகள் தீரும். பெரியவர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்புக் கொடுப்பது நல்லது. வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணவரவில் தாமதம் ஏற்படாது. வீட்டில் நிம்மதி கிடைக்கும். பெற்றோரின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நன்மை தரும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் நீங்கும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு விவசாயக் கடன்கள் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். வெளியூர் பயணங்கள் தள்ளிப் போகும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும்போது முக்கிய ஆவணங்களை உடன் வைத்திருப்பது நல்லது. பணவரவு அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது அவசியம். அரசு சம்பந்தப்பட்ட டெண்டர்களில் வெற்றி பெறுவீர்கள். கலைஞர்களுக்கு வரவேண்டிய பாக்கித் தொகை வந்து சேரும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.


கன்னி - கன்னி ராசிக்காரர்கள் வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு அதிக லாபம் ஈட்டுவார்கள். மகான்கள் மற்றும் ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவார்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவார்கள். வி.ஐ.பி.க்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கமாவார்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு மார்க்கெட்டிங் பிரிவில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். அலைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வார்கள். உடல் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் பங்குச் சந்தையில் ஈடுபடும்போது நிலவரத்தை அறிந்து நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிரபலமானவர்களால் நன்மை உண்டாகும். தொழிலில் சில மாற்றங்களைச் செய்வார்கள். பெண்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து அத்தியாவசியப் பொருட்களை வாங்குவார்கள். அரசியல்வாதிகளுக்கு புகழ் மற்றும் கௌரவம் உயரும். உடல் நலம் சிறக்கும். சாம்பல் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்கள் குலதெய்வப் பிரார்த்தனையை செய்து முடிப்பார்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வரும். மளிகைக் கடை மற்றும் சில்லறை வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பயணங்கள் நன்மையில் முடியும். பங்குதாரர்களுடன் இருந்த மோதல்கள் நீங்கும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.


மகரம் - மகர ராசிக்காரர்கள் வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவார்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களை உங்கள் வழியில் வரவழைக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால், தொழில் சார்ந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சாதாரண வார்த்தைகள் கூட பிரச்சினைகளை ஏற்படுத்தி, நிரந்தரமாக பேசாமல் போக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பொன்வண்ணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். திட்டவட்டமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.. தேஜஸ்வி யாதவ் மீது லாலு பிரசாத் மகள் புகார்

news

பீகாரில் புதிய ஆட்சியமைக்கும் பணிகள் விறுவிறுப்பு.. வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார்

news

சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்

news

வேலின் விழி திறப்பது திருத்தணியில்!

news

Gold price:தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை... இன்றை முழு விபரம் இதோ!

news

சோமாவாரத்தில் பிறந்த கார்த்திகை மாதம்.. மிக மிக விசேஷம்!

news

தமிழர்கள் கொண்டாடும் கார்த்திகை.. வான்மழை மட்டுமல்ல.. ஆன்மீகமும் பொழியும் மாதம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 17, 2025... இன்று கார்த்திகை சோமவார பிரதோஷம்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்