12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 18, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்

Nov 18, 2025,10:27 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு நவம்பர் 18 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், கார்த்திகை 02 ம் தேதி செவ்வாய்கிழமை

மாத சிவராத்திரி. இன்று காலை 08.31 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. காலை 06.59 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று முழுவதும் சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுபகாரியங்கள் விரைவில் கூடி வரும். உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள். சம்பள பாக்கிகள் கைக்கு வரும். பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் உஷ்ணம் அதிகமாகும் என்பதால், இளநீர் மற்றும் மோர் அருந்துவது நல்லது. இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு விவசாயக் கடன்கள் கிடைக்கும். அயல்நாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவங்கள் உண்டாகும். திடீர் பணவரவு உண்டு. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பார்க்க வேண்டும். வேலைச்சுமை இருக்கும். வெளியூர் பயணம் தள்ளிப் போகும். பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது வாய் நிதானம் தேவை. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். திருமணப் பேச்சுவார்த்தை சுபமாக முடியும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் நீலம்.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு தம்பதிகளிடையே சண்டை வேண்டாம். பொறுமையைக் கையாள்வது நன்மையைத் தரும். குடும்பத் தலைவிகள் சேமிப்பைத் தொடங்குவர். அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாகப் பேச வேண்டாம். இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். உடல் உற்சாகத்துடன் காணப்படும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் ஊதா.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு மார்க்கெட்டிங் பிரிவினர் பாராட்டப் பெறுவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். அரசு சம்பந்தப்பட்ட டெண்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். வாகனம் ஓட்டும் போது வாகனத்தின் முக்கிய ஆவணங்களை வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. இவர்களது அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


கன்னி - கன்னி ராசிக்காரர்கள் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை உங்கள் வழியில் வரவழைக்க வேண்டும். வி.ஐ.பி.க்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் பச்சை.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாண்டு அதிக லாபத்தை ஈட்டுவீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் நீலம்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் நிம்மதி கிடைக்கும். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். நினைத்த காரியம் சற்று தாமதமானாலும் நிறைவேறிவிடும். பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு மார்க்கெட்டிங் பிரிவினர் தாங்கள் நினைத்த அளவுக்குப் புதுப் புது ஆர்டர்கள் எடுப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் ஆர்வம் மிகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் நீலம்.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு தேகம் பளிச்சிடும். உற்சாகம் மிகுந்த நாள். பெண்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து அத்தியாவசியப் பொருள்களை வாங்குவர். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் பொன்வண்ணம்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால், முக்கியமான நபர்களிடம் அதாவது தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. காரணம், இன்று சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள் கூட பிரச்சனையைத் தந்து நிரந்தரமாகப் பேசாமல் போக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு

news

தொடர்ந்து 4வது நாளாக சரிந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,120 குறைவு!

news

தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா.. 2026ல் வரிசையாக களை கட்டப் போகும் சட்டசபைத் தேர்தல்கள்

news

இது தியாகம்.. டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தீவிரவாதி டாக்டர் உமர் பரபரப்பு வீடியோ

news

கார்த்திகை மாத சிவராத்திரி.. நாளை கார்த்திகை அமாவாசை.. அடுத்தடுத்து சிறப்பு!

news

சபரிமலை பக்தர்களே.. மூளை தின்னும் அமீபா அச்சுறுத்தல்.. இதைக் கடைப்பிடிங்க போதும்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 18, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்

news

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்...எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

news

சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்

அதிகம் பார்க்கும் செய்திகள்