தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 19 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், தை 06 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
தேய்பிறை சஷ்டி. காலை 08.37 வரை பஞ்சமி, பிறகு சஷ்டி. மாலை 06.37 வரை உத்திரம், பிறகு அஸ்தம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.34 வரை மரணயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - தன்னம்பிக்கை குறையலாம். மனதில் குழப்பமான நிலை இருக்கும். படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஆதரவான நிலை ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.
ரிஷபம் - மனதில் குழப்பங்கள் ஏற்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். கல்விப் பணிகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படலாம். அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.
மிதுனம் - மனதில் பதற்றம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையலாம். எதிலும் அமைதி காக்க வேண்டும். கோபம், வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வருமானத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
கடகம் - தன்னம்பிக்கை குறைவு ஏற்படும். மனம் அலைபாயும். பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். கஷ்டப்படுபவர்களுக்கு ஆடைகளை தானமாக அளிக்கலாம்.
சிம்மம் - அறிவு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வேலைக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி - சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பெற்றோரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். செலவுகள் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் சிரமங்கள் ஏற்படலாம். அதிகமான உழைக்க வேண்டி இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
துலாம் - மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். மனதில் சில பதற்றமும் வந்து நீங்கும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். செலவுகள் அதிகரிக்கலாம்.
விருச்சிகம் - அமைதியாக காணப்படுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு - மனதில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். எழுத்துக்களின் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமை அதிகரிக்கும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
மகரம் - பிள்ளைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். கல்வி பணிகளில் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.
கும்பம் - எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வியாபாரம் சுறுசுறுப்படையும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். நண்பர்கள் வழியில் வருமான வாய்ப்புகள் கிடைக்கும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு கிடைக்கும்.
மீனம் - கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். வாழ்க்கை துணையின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். செயல்களில் நம்பிக்கை அதிகரக்கும். நிறைவாக மனநிலையுடன் காணப்படுவீர்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}