12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 19, 2025... இன்று கார்த்திகை மாத அமாவாசை

Nov 19, 2025,11:02 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு நவம்பர் 19 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், கார்த்திகை 03 ம் தேதி புதன்கிழமை

அமாவாசை. சர்வதேச ஆண்கள் தினம். உலக கழிப்பறை தினம். இன்று காலை 10.27 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. காலை 09.21 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று முழுவதும் சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த நபர்களின் சந்திப்பு நிகழும். மாமியார் உடல்நிலையில் கவனம் தேவை. சுமாரான வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கும். மருத்துவ செலவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்களது அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமாக அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வங்கியில் பணம் வைப்புத்தொகையாக செலுத்துவார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். சற்று சோர்வாக காணப்பட்டாலும், விற்பனை பிரதிநிதிகள் எதிர்பார்த்த ஆர்டர்களை முடிப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைவாக முடிப்பார்கள். வேற்று மதத்தவர் உதவுவார். பெண்களுக்கு வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


கடகம் - கடக ராசிக்காரர்கள் குடும்பக் கடமைகளை முடிப்பது நல்லது. சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் வரலாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இளைஞர்கள் காதலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வார்கள். அக்கம் பக்கத்தினர் உதவுவார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள் விவாதங்களில் வெற்றி பெறுவார்கள். தடைகள் நீங்கும். கணவன்-மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். கமிஷன், புரோக்கரேஜ் மூலம் பணம் வரும். பணவரவு அதிகரிக்கும். புகழ் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் நண்பர்களாவார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் நீலம்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு உத்யோகத்தில் சலுகைகள் கிடைக்கும். தந்தையுடன் இணக்கமாக இருந்தால் நன்மை உண்டு. காதலர்களின் அன்பு பலப்படும். நீண்ட நாள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒரு பகுதி கடனை அடைத்து விடுவார்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் பச்சை.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் விவாதங்கள் வரலாம். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். உடல்நிலை மேம்படும். தொலைபேசி மூலம் நட்பு பலப்படும். பிடித்த நபரை சந்திப்பார்கள். சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள். வழக்கறிஞர்கள் செழிப்பார்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. இவர்களது அதிர்ஷ்ட நிறம் ஊதா.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். வெளியூர் பயணம் தடைபடலாம். மருத்துவர்கள் சாதனை படைப்பார்கள். விவசாயிகளுக்கு தேவையான கடன் கிடைக்கும். அவர்கள் செழிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் காட்டுவார்கள். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களின் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். வீட்டுக் கடனில் ஒரு பகுதியை அடைத்து விடுவார்கள். இணையதளம் மூலம் வேலையை முடிப்பார்கள். பிரிந்த தம்பதிகள் இணைவார்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவார்கள். சுப காரியங்கள் தாமதமாகும். அலுவலகத்தில் உள்ள நீண்ட நாள் பிரச்சினை தீரும். இவர்களது அதிர்ஷ்ட நிறம் கடல் நீலம்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்து செல்வது நல்லது. அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். நினைத்த காரியம் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல், சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இவர்களது அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு நண்பர்களிடையே சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். பூர்வீக சொத்து சம்பந்தமாக இருந்த தேக்க நிலை நீங்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். இவர்களது அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால், முக்கியமான நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் சார்ந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். சாதாரண வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து, நிரந்தரமாக பேசாமல் போக வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை. இவர்களது அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இன்னிக்கு என்ன நாள் தெரியுமா.. சர்வதேச ஆண்கள் தினம்..!

news

அதிரடி சரவெடியென உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.800 உயர்வு

news

மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்

news

ஊரெல்லாம் உன்னைக் கண்டு.. நயன்தாராவுக்கு.. விக்கி அளித்த பர்த்டே கிப்ட் என்ன தெரியுமா??

news

வானம் அருளும் மழைத்துளியே!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 19, 2025... இன்று கார்த்திகை மாத அமாவாசை

news

வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாலையிலேயே வந்த பரபரப்பு மெயில்.. உஷாரான போலீஸார்

news

கோவையில் இயற்கை வேளாண் மாநாடு.. பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை

news

TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்