தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 20 ம் தேதி, திங்கட்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், தை 07 ம் தேதி திங்கட்கிழமை
காலை 10.35 வரை சஷ்டி, பிறகு சப்தமி. இரவு 09.37 வரை அஸ்தம், பிறகு சித்திரை நட்சத்திரம் உள்ளது. காலை 06.34 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல்3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - லாபகரமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை துணையுடன் சிறுசிறு பிரச்சனைகள் வந்து செல்லலாம். விட்டுக் கொடுத்து போனது நல்லது.
ரிஷபம் - பணவரவு நன்றாக இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் அனைத்து பணிகளையும் உரிய நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணம் வரும் வாய்ப்புகள் உருவானாலும், செலவுகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மிதுனம் - மாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்வீர்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளில் கவனம் அவசியம்.
கடகம் - கவனமாக இருக்க வேண்டிய நாள். மறதியால் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். பொருளாதாரம் நன்றாக இருக்கும். உடல் நிலையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். பணியிடத்தில் எழுத்தம் அதிகரிக்கும். இதனால் சோர்வுடன் காணப்படுவீர்கள்.
சிம்மம் - ஆரோக்கியம் நிறைந்த நாளாக இருக்கும். செலவை கட்டுக்குள் வைத்திருக்க திட்டமிடுவீர்கள். மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்களின் ஆதரவு பெருகும்.
கன்னி - முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். பழைய முதலீடுகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். உடல் நிலையில் கவனம் தேவை. நம்பிக்கையுடன் செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். சோம்பல், உடல் சோர்வு போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
துலாம் - இனிமையான நாளாக இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். காலையில் பரபரப்புடன் காணப்பட்டாலும் நாளின் பிற்பகுதியில் ரிலாக்சாக உணர்வீர்கள். வாழ்க்கை துணையுடனான பிரச்சனைகள் தீரும். யாரிடமும் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம் - மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். வேலையில் சுமாரான நிலையே இருக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். இருந்தாலும் செலவுகளில் கவனம் அவசியம்.
தனுசு - பணி சுமை நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்க நினைப்பீர்கள். மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளுடன் வாக்கு வாதம் வேண்டாம். மன அழுத்தம் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியம்.
மகரம் - சாதகமான நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் பணவரவு உண்டாகும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கரிக்கலாம். பணியாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
கும்பம் - ஆற்றலுடன் செயல்பட்டு வேலைகளை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணை உடனான புரிதல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
மீனம் - இனிமையான நாளாக இருக்கும். வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இருந்தாலும் எதிலும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}