12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 20, 2025... இன்று எண்ணங்கள் ஈடேறும்

Sep 20, 2025,10:29 AM IST
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


விசுவாவசு வருடம், புரட்டாசி 04 ம் தேதி சனிக்கிழமை
புரட்டாசி முதல் சனிக்கிழமை. மாத சிவராத்திரி. அதிகாலை 12.55 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இன்று காலை 09.57 வரை மகம் நட்சத்திரமும், பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.02 வரை மரணயோகமும், பிறகு காலை 09.57 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை 
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை

சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்




மேஷம் - அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் கொஞ்சம் தாமதமாகும். கோர்ட் கேஸ் விஷயங்கள் சாதகமாக முடியும். உறவினர்கள் உதவி செய்வார்கள். பழைய வீட்டை விற்றுவிட்டுப் புது வீடு வாங்குவீர்கள். வீட்டில் பழுதடைந்த மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும். அதிர்ஷ்ட நிறம் - பொன்நிறம்.

ரிஷபம் -  அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் உங்களுடன் நல்ல முறையில் பழகுவார்கள். மாணவர்களாக இருந்தால் நண்பர்களிடம் கவனமாகப் பழகுங்கள். காதல் விஷயங்கள் கசப்பாக இருக்கும். தூர தேசத்தில் இருக்கும் கோவிலுக்குப் போக வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் - பச்சை

மிதுனம் - கல்யாண யோகம் இருக்கு. மேற்படிப்பு படிக்க ஆசை வரும். உங்க கூட பொறந்த சகோதரியை அதிகமா நம்பாதீங்க. அவங்க உங்க சொத்துக்காக காத்துட்டு இருக்காங்க. பெரிய பதவி கிடைக்கும். வேற ஊருக்கு மாறுறதுக்கும் வாய்ப்பு இருக்கு. அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு.

கடகம் - உத்தியோகத்தில் இருக்கிறவங்களுக்கு வேலை அதிகமா இருக்கும். ஆனா எல்லா வேலையும் கரெக்டா முடிச்சிடுவீங்க. வீடு கட்டிக்கிட்டு இருக்கறவங்களுக்கு செலவு அதிகமா இருக்கும். எதிரிகிட்ட ஜாக்கிரதையா இருங்க. அவங்க உங்களுக்கு மறைமுகமா பிரச்சனை பண்ணுவாங்க. அதிர்ஷ்ட நிறம் - கருநீலம்.

சிம்மம் - உத்தியோகத்துல உங்க மேலதிகாரி ஆபீஸ் ரகசியத்த உங்ககிட்ட சொல்லுவாங்க. கலைத்துறையில இருக்கிறவங்களுக்கு கற்பனை திறன் வளரும். வண்டி, வாகனத்த சரி செய்வீங்க. சில பேர் வீடு மாற வேண்டிய சூழ்நிலை வரும். கொஞ்சம் பணம் வரும். புது வீடு கட்ட லோன் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை.

கன்னி - எழுத்தாளர்கள் உங்க படைப்புகளை வெளியிடுவீங்க. பாராட்டும், விருதும் கிடைக்கும். விவசாயிகளுக்கு நிறைய விளைச்சல் இருக்கும். பழைய கடனை அடைக்க வழி கிடைக்கும். பண விஷயத்துல யாரையும் நம்பாதீங்க. உங்க பெற்றோர்கிட்ட பேசி உங்க எதிர்காலத்த பத்தி சில முக்கியமான திட்டங்கள போடுவீங்க. அதிர்ஷ்ட நிறம் - சாம்பல்.

துலாம் -   உங்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். மகான்கள், சித்தர்களோட ஆசி கிடைக்கும். ஷேர் மூலமா பணம் வரும். உங்க மனைவிக்கு மருத்துவ செலவு வரும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமா இருக்கும். உத்தியோகத்தில் இருக்கிறவங்களுக்கு வேலை குறையும். அத்தியாவசிய செலவுகள் அதிகமா இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவி பண்ணுவாங்க. அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு.

விருச்சிகம் - அரசியல்ல இருக்கிறவங்க தலைவர்கிட்ட நெருக்கமா இருப்பீங்க. பொய் சொல்றவங்ககிட்ட இருந்து பெண்கள் தள்ளி இருங்க. நீங்க புதுசா ஏதாவது செய்ய முயற்சி பண்ணா உங்க பெற்றோர் சப்போர்ட் பண்ணுவாங்க. யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. பேசும்போது கவனமா இருங்க. நீங்க இருக்கிற இடத்துல நல்ல வீடு கட்ட முயற்சி பண்ணுங்க. அதுல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்.

தனுசு -  கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன பிரச்சனை வந்தா பேசி தீர்த்துக்கோங்க. அப்பப்போ மன இறுக்கம், அசதி, சோர்வு வரும். புது ஏஜென்சி ஆரம்பிப்பீங்க. அரசியல்வாதிகளுக்கு புது பொறுப்பு வரும். முடிவு எடுக்கிறதுல இருந்த தடுமாற்றம் நீங்கும். மேற்படிப்பு படிக்க ஆர்வம் வரும். அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை.

மகரம் - இன்னைக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம். அதனால பயணம் போறத தவிர்த்திடுங்க. ஏதாவது தடை வரலாம். அதனால நேரமும், பணமும் வீணாகும். அதனால கடவுள மட்டும் வேண்டிக்கோங்க. அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை.

கும்பம் -  உங்க நண்பர்கள் உங்கள புரிஞ்சுக்குவாங்க. உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வீடு கட்டி குடி போவீங்க. உங்க பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ண முயற்சி பண்ணுங்க. அது நல்லபடியா முடியும். உங்க உடல் ஆரோக்கியம் நல்லா இருக்கும். அரசியல்ல உங்களுக்கு செல்வாக்கு அதிகமா இருக்கும். புதுசா வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீங்க. அதிர்ஷ்ட நிறம் - பச்சை.

மீனம் - உங்களுக்கு பணம் நல்லா வரும். புது வேலை கிடைக்கும். நீங்க என்ன செய்ய நினைச்சாலும் அது உடனே நடக்கும். கணவன், மனைவி ஒருத்தருக்கொருத்தர் விட்டு கொடுத்து போங்க. வியாபாரத்துல கஷ்டப்பட்டு வேலை செஞ்சா லாபம் கிடைக்கும். உங்க வீட்ட அழகா வெச்சுக்குவீங்க. அதிர்ஷ்ட நிறம் - ஊதா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புரட்டாசி முதல் சனிக்கிழமை.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாள்!

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

நாகப்பட்டனத்தை நோக்கி விரையும் விஜய்.. போலீஸ் கடும் கட்டுப்பாடுகள்.. குவியும் தொண்டர்கள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 20, 2025... இன்று எண்ணங்கள் ஈடேறும்

news

விஜய் வாகனத்தைப் பின் தொடர்ந்து வரக் கூடாது.. மரங்களில் ஏறக் கூடாது.. தவெக கோரிக்கை

news

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

news

பாமக.,வின் மாம்பழச் சின்னம்...அன்புமணிக்கு கிடைத்தது எப்படி? வெளியான பகீர் தகவல்

news

நாகையில் நாளை விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள இடம் மாற்றம்

news

ரோபோ சங்கரோட மறைவு வேதனையா இருக்கு.. தவெக தலைவர் விஜய் இரங்கல்

அதிகம் பார்க்கும் செய்திகள்