தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், கார்த்திகை 05 ம் தேதி வெள்ளிக்கிழமை
உலக தொலைக்காட்சி தினம். உலக மீனவர்கள் தினம், உலக ஹலோ தினம். இன்று பகல் 02.37 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. பகல் 02.26 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. இன்று பகல் 02.26 வரை சித்தயோகமும், பிரகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
சந்திராஷ்டமம் - அஸ்வினி, பரணி

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். இறைவனை மட்டும் பிரார்த்தனை செய்வது இன்றைய நாளில் உங்களுக்கு நன்மை தரும். பல காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால், புதிய முயற்சிகளைத் தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு பழைய கடன்கள் அடைபடும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புதிய கிளைகளைத் திறக்கும் யோகம் உள்ளது. தந்தையின் சொற்களுக்குச் செவிசாய்ப்பது உங்களுக்கு நலம் தரும். சொந்தமாக பிளாட் அல்லது நிலம் வாங்க வேண்டும் என்ற உங்கள் ஆசை நிறைவேறும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு ஷேர் மார்க்கெட் மூலமாக பணம் வர வாய்ப்புள்ளது. வசதிகளும் வாய்ப்புகளும் கூடும். எதிர்வீட்டில் உள்ளவர்களுடன் இருந்த சச்சரவுகள் விலகும். உடல் நலம் சிறப்படையும். சில்லறை வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். மாணவர்கள் வேற்று மொழிகளைக் கற்க ஆர்வம் காட்டுவார்கள். நீங்கள் முயற்சி செய்யும் காரியம் முடியும் வரை அதை வெளியிடாமல் இருப்பது நல்லது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் கரும்பச்சை.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு விருந்தினர்கள் வந்து போவார்கள். உடல் நலம் சிறப்பாகும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள். தம்பதியரிடையே ஒற்றுமை மேலோங்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு விரைவில் வீட்டில் மழலைச் செல்வம் பிறக்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கங்களும் தடைகளும் நீங்கும். உங்களுக்குச் சேர வேண்டிய பங்குத் தொகை வந்து சேரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு விற்க முடியாத காலி மனைகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஒரு சிலருக்கு புதிய நிறுவனங்களில் வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உடல் நலம் சீராகும். பணப் பொறுப்புகளைக் கையாள்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவார்கள். அதற்கான வேலைகளை இன்று தொடங்குவார்கள். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள். புதிய தொழில்களைத் தொடங்குவார்கள். புதுமணத் தம்பதியர் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு வியாபாரம் சீராக இருக்கும். உத்யோகத்தில் நீங்கள் விரும்பியபடி திருப்திகரமாகச் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சலுகைகள் மீண்டும் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாகப் போவது நல்லது. மகன், மகளுக்கு வசதியான இடத்தில் இருந்து நல்ல சம்பந்தம் கூடிவரும். மாணவர்களுக்குப் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். தம்பதியர் ஒற்றுமையுடன் இருப்பார்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு புதிய வருமானத்திற்கு வழி பிறக்கும். பிள்ளைகள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். புரமோஷன் அல்லது டிரான்ஸ்பருக்கு வாய்ப்புள்ளது. உல்லாசப் பயணங்கள் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவச் செலவுகளுக்கும் இடம் உண்டு. உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு வெளியூர் டிரான்ஸ்பர் கிடைக்கும். பெண்கள் தங்கள் தோழிகளிடம் மனம் விட்டுப் பேச நேரம் கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பதவி உயர்வு பற்றிய செய்திகள் வரும். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். உங்கள் உடல் தேகம் பளிச்சிடும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் பொன்னிறம்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு பெரிய மனிதர்கள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அளவோடு பழகுவது நல்லது. உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். அனுசரித்துச் செல்வது நல்லது. மாமனாரின் உடல் நலம் பாதிக்கப்படலாம். மாணவர்கள் மேற்படிப்புக்காகக் கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
உலக தொலைக்காட்சி நாள் (World Television Day).. அன்று பார்த்த தூர்தர்ஷனும், ரூபவாகினியும்!
உலகக்கோப்பை குத்துச் சண்டை பைனல்ஸ் 2025...தங்கங்களை குவித்து வரலாறு படைக்கும் இந்திய வீரர்கள்
கர்நாடக காங்கிரசில் குழப்பம்...சிவக்குமாருக்கு முதல்வர் பதவி கேட்கும் ஆதரவாளர்கள்
பிரேசில் ஐநா காலநிலை மாநாட்டில் தீ விபத்து...21 பேர் காயம்
சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்...அதிரடி உத்தரவுகள் பிறப்பித்த கேரள கோர்ட்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 20, 2025... இன்று அதிர்ஷ்டம் தேடி வரும் நாள்
குடையை ரெடியா எடுத்து வச்சுக்கோங்க...தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வெளுக்குமாம்!
சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி மனு... என்ன கிழமை தெரியுமா?
மசோதாவை கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
{{comments.comment}}