தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், புரட்டாசி 07 ம் தேதி செவ்வாய்கிழமை
அதிகாலை 02.49 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. இன்று பகல் 02.17 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி
மேஷம் - உங்களுடைய முகத் தோற்றம் பளிச்சிடும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். பணப் பிரச்சினை இருக்காது. அதிர்ஷ்ட நிறம்: ஊதா.
ரிஷபம் - தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம். முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் புதிய கிளைகளை துவங்குவர். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைத்து, உடல் பொலிவினைக் கூட்டும். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்.
மிதுனம் - வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் நன்கு படிப்பர். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.
கடகம் - வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது. விரும்பியவரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். உடல் நலம் பலம் பெறும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
சிம்மம் - புதிய வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். இரு சக்கர வாகனம் ஓட்டும் போது வேகத்தை குறைப்பது நல்லது. நட்பால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட நிறம்: நீலம்.
கன்னி - புதிய நண்பர்கள் கிடைப்பர். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை. வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். எதிரிகள் விலகிப் போவர். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவர். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.
துலாம் - வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பெண்கள் தங்கள் குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். தொழில் அதிபர்கள் தம்பதிகள் தங்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர். மாணவர்கள் வேற்று மொழியினைக் கற்க ஆர்வம் கொள்வர். தேக ஆரோக்கியம் நன்கு இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை.
விருச்சிகம் - வியாபாரத்தில் தங்கள் கீழ் பணிபுரியும் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தங்கள் காதலை வெளிப்படுத்த ஏற்ற காலம். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்.
தனுசு - வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமுடன் இருப்பது நல்லது. தம்பதிகளிடத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். உத்யோகத்தில் வேலை பளு அதிகம் இருக்கும். கலைஞர்கள் தங்கள் படங்களில் வெற்றி காண்பார்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்.
மகரம் - உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவர். அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் மிகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்தவாரே துணை தேடி வரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை.
கும்பம் - இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: கிரே.
மீனம் - பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பணப்பற்றாக்குறை நீங்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். கூட்டு சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம்.
அக்டோபர் 14 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது - பேரவைத்தலைவர் அப்பாவு அறிவிப்பு
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த விஜய் கருத்தை வரவேற்கிறேன்: அண்ணாமலை
Gold rate.. தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு.. பெரும் கவலையில் பெண்களைப் பெற்றோர்!
அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைக்க வேண்டும்.. அதுதான் அவருக்கு நல்லது.. ராஜேந்திர பாலாஜி
மும்பை பங்குச் சந்தையில் காலையிலேயே உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
கொல்கத்தாவை உலுக்கி எடுத்த கன மழை.. 3 பேர் பலி.. ரயில் சேவைகளும் பாதிப்பு
பீகார் சட்டசபைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் மகள் மீண்டும் களத்தில் குதிக்கிறாரா?
நவராத்திரி 2ம் நாள் வழிபாடு .. இன்று என்ன கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்!
நவராத்திரி திருவிழா.. பராசக்திக்கான 9 நாட்கள்.. ஆடுவது சக்தி.. ஆட்டுவித்து ரசிப்பது சிவம்!
{{comments.comment}}