12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 25, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Jan 25, 2025,10:20 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜனவரி 25 ம் தேதி, சனிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், தை 12 ம் தேதி சனிக்கிழமை

வாஸ்து நாள், ஏகாதசி. இரவு 07.34 வரை ஏகாதசி, பிறகு துவாதசி. காலை 06.29 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.29 வரை சித்தயோகம், பிறகு காலை 06.34 வரை மரணயோகம், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை 

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


சந்திராஷ்டமம் - அஸ்வினி, பரணி



இன்றைய ராசிபலன் :


மேஷம் -  மனதில் குழப்பங்கள் அதிகரிக்கலாம். மற்றவர்களிடம் பேசும் போது மிகவும் எச்சரிக்கையுடன் நடந்த கொள்ள வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சூழல் அமையும்.  


ரிஷபம் - மனம் சஞ்சலத்துடன் காணப்படுவீர்கள். மனதில் அமைதியை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். சில தடுமாற்றங்களை சந்திக்க நேரிடும்.


மிதுனம் -  தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள். மற்றவர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலிடத்தின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் உயர்வு ஏற்படும். பக்தியில் ஈடுபட நினைப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும்.


கடகம் -  நம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் கட்டுப்பாடு மற்றும் நிதானத்துடன் நடந்து கொள்வத நல்லது. பேச்சில் நிதானம் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்.


சிம்மம் - முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். அதிக உற்சாகத்தை தவிர்த்து பொறுமையை கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற கோபம், வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். கல்வி தொடர்பான பணியில் கவனம் செலுத்த வேண்டும்.


கன்னி - மனதில் சஞ்சலங்கள் ஏற்படும். அமைதியையும், பொறுமையையும் கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற கோபங்களை தவிர்க்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பாதை ஏற்படும். வியாபாரத்தில் உயர்வு ஏற்படும்.


துலாம் - மன சோர்வுகள் அதிகரிக்கும். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. செலவுகள் அதிகரிக்கலாம். குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் உயர்வு ஏற்படும். 


விருச்சிகம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றோரு புறம் குழப்பமும் இருந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். குடும்பத்துடன் ஆன்மிக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். மனை தொடர்பான விஷயங்களில் லாபம் ஏற்படும்.


தனுசு - நம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். நண்பர்களின் உதவியால் வருமானம் அதிகரிக்க வழிகள் கிடைக்கும். நீண்ட கால நண்பர் ஒருவரை சந்திக்க நேரிடும். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். 


மகரம் -  மன அழுத்தங்கள் அதிகரிக்கலாம். முடிந்த வரை அமைதி, பொறுமையை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற கோபங்களை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்கலாம். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.


கும்பம் - நம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள். குழப்பங்கள் அதிகரிக்கலாம். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். பெற்றோரின் உடல் நிலையில் அக்கறை காட்ட வேண்டும். வருமானம் அதிகரிக்கும்.


மீனம் - குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி காக்க வேண்டும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வாகன வசதி அதிகரிக்கும். எதிலும் பொறுமை, நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது பொறுமையை கடைபிடிப்பது நல்லது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்