தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், புரட்டாசி 09 ம் தேதி வியாழக்கிழமை
சதர்த்தி. காலை 06.09 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. இன்று இரவு 07.03 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.03 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி
மேஷம் - அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். குடும்பத் தலைவிகளுக்கு பணம் நல்லா வரும். பட்டா மாறுதல் நடக்கும். மனை வாங்கும் முயற்சி வெற்றி அடையும். பெற்றோரின் உடல் நலம் நல்லா இருக்கும். ஆன்மீகப் பணிகள் சிறப்பா நடக்கும். மனைவி வீட்டாரிடம் நல்ல உறவு ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்.
ரிஷபம் - அரசியல்வாதிகள் மத்த கட்சியினராலும் மதிக்கப்படுவாங்க. விவசாயிகள் விளைச்சலை அதிகப்படுத்துவாங்க. உடல் ஆரோக்கியமா இருக்கும். மாணவர்கள் நல்லா படிச்சு பெற்றோரை சந்தோஷப்படுத்துவாங்க. வியாபாரிகள் பேங்க்ல லோன் வாங்கி முதலீட்டை அதிகப்படுத்துவாங்க. உடம்புக்கு ஒன்னும் ஆகாது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.
மிதுனம் - புது நண்பர்கள் கிடைப்பாங்க. அவங்க உதவி செய்வாங்க. சொத்து பிரச்சினை தீரும். சேமிச்ச பணத்துல நகை வாங்குவீங்க. பெண்கள் வீட்டை அழகுபடுத்துவீங்க. தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை இருக்கும். உடல் உழைப்பு அதிகமா இருக்கும். உடல் நலம் நல்லா இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஊதா.
கடகம் - மாணவர்கள் நல்லா படிச்சு முன்னேறுவாங்க. ஏஜென்ட்களுக்கு லாபம் கிடைக்கும். வியாபாரத்துக்காக வெளியூர் போவீங்க. பணத்துக்கு கஷ்டம் இருக்காது. நிலம் பதிவு செய்வீங்க. சமூகத்துல மரியாதை கூடும். அரசியல்வாதிகளோட எண்ணம் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: கிரே.
சிம்மம் - பேச்சுல நகைச்சுவை இருக்கும். பணம் நிறைய வரும். மனசு சந்தோஷமா இருக்கும். தம்பதிகள் ஒற்றுமையா இருப்பாங்க. பங்குச் சந்தையால பணம் வரும். வேலை செய்றவங்க செல்வாக்கா இருப்பாங்க. தொழிலதிபர்கள் தொழிலாளர்களோட ஆதரவோட வளர்ச்சி அடைவாங்க. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.
கன்னி - புது வண்டி வாங்கும் யோகம் இருக்கு. ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்த நல்ல செய்தி வரும். குழந்தைகளால சந்தோஷம் உண்டாகும். உடம்பு நல்லா இருக்கும். வேலை தேடுறவங்களுக்கு வேலை கிடைக்கும். வீடு, நிலம் சம்பந்தப்பட்ட தொழில் நல்லா நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்.
துலாம் - பெரிய மனுஷங்களோட நட்பு கிடைக்கும். வருமானம் நல்லா இருக்கும். வீடு கட்டும் யோகம் வரும். உங்க தேவை நிறைவேறும். நல்ல விஷயங்கள் நடக்கும். கல்யாண தடை நீங்கும். உடம்பு ஆரோக்கியமா இருக்கும். தொழில்ல ஆர்வம் அதிகமாகும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீங்க. அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை.
விருச்சிகம் - பெண்கள் மாமியார் வீட்ல நல்ல பேர் வாங்குவாங்க. யாரையும் எதிர்த்து பேசாதீங்க. தொழில்ல நல்ல நிலைமை வரும். புதுசா முயற்சி பண்ணி வெற்றி பெறுவீங்க. பூர்வீக சொத்து கைக்கு வரும். சொந்தக்காரங்க வந்தா வீட்ல சந்தோஷம் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்.
தனுசு - சுப நிகழ்ச்சி நல்லபடியா நடக்கும். மார்க்கெட்டிங் வேலை செய்றவங்களுக்கு ஆர்டர் கிடைக்கும். முக்கியமானவங்க நட்பு கிடைக்கும். புது வீடு சந்தோஷத்தை கொடுக்கும். தூர பிரயாணம் போறதை தவிர்க்கிறது நல்லது. மாணவர்கள் நல்லா படிச்சு சிறப்பா வருவாங்க. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகமா இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை.
மகரம் - மாணவர்கள் நல்லா படிப்பாங்க. அரசியல்வாதிகள் தலைவர்கிட்ட நல்ல பேர் வாங்குவாங்க. பெண்கள் கணவருக்கு அன்பானவங்களா இருப்பாங்க. மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகமா இருக்கும். முடிஞ்ச உதவியை மத்தவங்களுக்கு செய்வீங்க. பணம் நிறைய வழியில வரும். பெண்களோட சேமிப்பு அதிகமாகும். அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்.
கும்பம் - வீட்ல சுப நிகழ்ச்சி நடத்த நேரம் வரும். பணம் அதிகமா வரும். நண்பர்களை பார்ப்பீங்க. கொடுக்கல் வாங்கல்ல கவனம் தேவை. வெளிநாட்டு ஒப்பந்தம் மூலமா லாபம் அதிகமாகும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவு நல்லா இருக்கும். விவசாயிகள் புது கருவிகள் மூலமா வேலையை நல்லா செய்வாங்க. அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்.
மீனம் - உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கறதால முக்கியமானவங்கள தவிர்க்கிறது நல்லது. ஏன்னா இன்னைக்கு உங்க ராசிக்கு சந்திரன் அஷ்டம ஸ்தானத்துல இருக்காரு. சுபகாரியங்கள தள்ளி வைக்கிறது நல்லது. இன்னைக்கு சாமி கும்பிடுறது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
இரும்புச்சத்து, கால்சியம், புரதம், நார்ச்சத்து நிறைந்த ராகி முருங்கைக்கீரை தோசை!
மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம்: செல்வப்பெருந்தகை!
செப்., 27ம் தேதி நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் மாற்றம்
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை விரைவில் சந்திக்க பிரதமர் மோடி திட்டம்.. பிரச்சினைகள் தீருமா?
நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.720 குறைவு!
இன்று நவராத்திரி 4ம் நாள்...வழிபட வேண்டிய அம்பிகை, மலர், நைவேத்தியம் முழு விபரம்
லடாக் பகுதியில் பெரும் வன்முறை.. போர்க்களமாக மாறிய லே.. 4 பேர் பலி.. பலர் காயம்
ஆசியா கோப்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் சேட்டைத்தனம்.. ஆவேசத்துடன் ஆக்ஷனில் குதித்த பிசிசிஐ
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
{{comments.comment}}