12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 29, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Nov 29, 2024,10:26 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.

2024 ஆம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி, வெள்ளிகிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய பஞ்சாங்கம் :

குரோதி வருடம், கார்த்திகை 14 ம் தேதி வெள்ளிகிழமை
மாத சிவராத்திரி, சுப முகூர்த்த நாள். இன்று காலை 09.23 வரை திரியோதசி, அதற்கு பிறகு சதுர்த்தசி. காலை 11.32 வரை சுவாதி, பிறகு விசாகம். காலை 06.14 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம்: காலை - 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.30 முதல் 05.00 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 12.15 முதல் 01.15 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30

சந்திராஷ்டமம் - உத்திராடம், ரேவதி

இன்றைய ராசிபலன் :



மேஷம் - வேலையில் கவனமும் இருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆலோசனை பெறுவதால் வெற்றியை பெறலாம். பணம் வருவதில் சிக்கல் ஏற்படும். குடும்பத்திலும் பண்டை சச்சரவுகள் வர வாய்ப்புள்ளது.

ரிஷபம் - மற்றவர்களுடன் இணைந்து தொழில் துவங்க ஏற்ற நாள். அனுபவ அறிவு கைகொடுக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள்.

மிதுனம் - மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சில இழப்புகளை சந்திக்க நேரிடும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் உயர்த்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கடகம் - இன்று எடுக்கும் துணிச்சலான முடிவு மூலம் லாபம் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். இதனால் பொருளாதாரம் சீராக இருக்கும்.

சிம்மம் - பொருளாதாரத்தில் சாதகமான நிலை அமையும். முதலீடு செய்வதற்கு பணத்தை செலவிடுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்காலத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

கன்னி - லாபம் பெருகும் நாள். நீண்ட பயணம் செல்வதற்கு வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகளில் தீவிரம் காட்டுவீர்கள். சிறு வயது நண்பர் மூலம் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

துலாம் - பணிச்சுமை அதிகரிக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் ஒரு சிலருக்கு கைக்கு வரும். இதனால் செல்வ நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம் - செலவுகளை நினைத்து வருத்தப்படுவீர்கள். ஆனாலும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

தனுசு - நல்ல நாளாக இருக்கும். பொருளாதார நிலை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடை பட்ட காரியங்கள் நடைபெறும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் சிறு வாக்குவாதம் ஏற்படலாம். தம்பதிகள் இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம் - பண பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். பணி தொடர்பாக பயணம் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணங்கள் கைக் கூடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தடைபட்ட பணிகள் முடியும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

கும்பம் - அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். காதல் இனிக்கும். 

மீனம் - மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வேலை, வாகனம், கட்டிடங்கள் போன்றவை வழக்கமானதாகவே இருக்கும். மனத்தில் குழப்பம் ஏற்படும். காதல் கை கூடும். திருமண வாய்ப்புகள் தேடி வரும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு

news

திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!

news

3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

news

Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!

news

Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!

news

கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?

news

ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!

news

திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?

news

Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்