12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 29, 2025... இன்று வெற்றிகளை குவிக்க போகும் ராசிகள்

Sep 29, 2025,10:13 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், புரட்டாசி 13 ம் தேதி திங்கட்கிழமை

உலக இதய தினம். பகல் 01.41 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. அதிகாலை 02.24 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. இன்று அதிகாலை 02.24 வரை மரணயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 09.15 முதல் 10.15 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை 

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - பரணி, கிருத்திகை


இன்றைய ராசிபலன் :




மேஷம் - ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் கூடும். உங்கள் காலி மனையில் வீடு கட்ட திட்டமிடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு, கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வங்கிக்கடன் எளிதாகக் கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். பெற்றோர்களின் உடல் நலம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்.


ரிஷபம் -  ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம், இன்று அவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. எனவே, புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. அதேசமயம், கிருத்திகை மற்றும் மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் இன்று தங்கள் அனைத்து காரியங்களையும் தொடங்கலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை.


மிதுனம் - வழக்கு தொடுத்தவர்களுக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரிந்து சென்ற தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். உங்கள் எதிரிகள் தோல்வியடைவார்கள். உத்யோகத்தில் நிம்மதியான சூழல் இருக்கும். நீங்கள் செய்யும் வேலைகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும். மூத்த சகோதரி மூலம் உதவிகள் கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவில் உள்ளவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: கிரே.


கடகம் - சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொலைபேசி மூலம் உங்கள் நட்பு வட்டம் பலப்படும். நீங்கள் விரும்பிய நபரை சந்திப்பீர்கள். தம்பதிகளின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நன்மையை தரும். மருத்துவர்களுக்கு இது ஒரு சாதகமான நாள். பணம் தாராளமாகப் புழங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்.


சிம்மம் - திருமண வயதில் உள்ளவர்களுக்கு அவர்களின் திருமண கனவு நிறைவேறும். சுப நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடக்கும். பெண்களின் சேமிப்பு உயரும். மனைவிகள் தங்கள் கணவரின் அன்புக்குரியவராக விளங்குவார்கள். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில்களில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.


கன்னி - பணவரவு அதிகரிக்கும். ஆன்மீகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். உறவினர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தவர்களுக்கு லாபம் கிடைக்கும். அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவார்கள். உடல் நலம் மேம்படும். அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்.


துலாம் -   பிள்ளைகளால் உங்கள் மனம் மகிழ்ச்சி அடையும். வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு மதிப்பு கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்கள். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை கிடைக்கும். அது அவர்களுக்கு சில முக்கிய முடிவுகளை எடுக்க உதவியாக இருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை.


விருச்சிகம் - பெண்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. மாமியார் வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும். தம்பதிகளின் அன்யோன்யம் அதிகரிக்கும். சுப காரியங்கள் கைகூடும். வீட்டில் உங்கள் முக்கிய ஆவணங்களை பத்திரமாகப் பாதுகாப்பீர்கள். நிலம் சம்பந்தப்பட்ட தொழில்கள் சிறப்படையும். கமிஷன் அதிகம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்.


தனுசு -  அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். எனவே, சிக்கனமாக இருப்பது அவசியம். திடீர் பணவரவு உண்டாகும். குடும்ப விஷயங்களில் வெளிநபர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும். விற்பனையாளர்கள் சாமர்த்தியமாகப் பேசி விற்பனையை அதிகரிப்பார்கள். வியாபாரத்தில் உங்கள் மனைவி ஒத்துழைப்பார். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.


மகரம் - பணம் பல வழிகளில் வரும். காதல் விஷயங்களில் சில கசப்பான அனுபவங்கள் ஏற்படலாம். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பிடித்தமான வரன் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களின் எண்ணங்கள் ஈடேறும். பாதியில் நின்றிருந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணிகள் முழுமையடையும். அதிர்ஷ்ட நிறம்: கிரே.


கும்பம் -  மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். பெண்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே நல்ல புரிதல் உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்ட நிறம்: ஊதா.


மீனம் - நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். உங்கள் கையிருப்பு அதிகரிக்கும். ஒரு தொகையை வீட்டு கடன்களுக்கு செலுத்தி விடுவீர்கள். தம்பதிகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். அரசியல் மற்றும் பொதுத் துறையில் இருப்பவர்களுக்கு அவர்களின் சொல்லுக்கு மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லதோர் வீணைசெய்தே அதை .. நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ!

news

டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?

news

நவராத்திரி.. இன்று 8ம் நாள் : அலங்காரம், நைவேத்தியம், மலர், நிறம் முழு விபரம்!

news

கல்வி, இசை, கலைமற்றும் அறிவின் தெய்வம்.. சரஸ்வதிக்குப் பெயர் வந்தது எப்படி?

news

தங்கம், வெள்ளி விலையில் தினம் தினம் புதிய உச்சம்... இன்றைய விலை நிலவரம் இதோ!

news

கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?

news

நாங்க புறக்கணிச்சா அதுக்காக கோப்பையைக் கொடுக்காம போவீங்களா.. இந்தியா கடும் கோபம்

news

கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி

news

ஆசிய கோப்பையை வாங்க மறுத்த இந்திய கேப்டன்.. வெறும் கையால் கொண்டாடிய இந்திய அணி!

அதிகம் பார்க்கும் செய்திகள்