12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 01, 2025... இன்று இவர்களின் வாழ்க்கையே மாறும்

Oct 01, 2025,11:34 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், புரட்டாசி 15 ம் தேதி புதன்கிழமை

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.  சர்வதேச முதியோர் தினம், சர்வதேச சைவ தினம். பகல் 03.33 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 05.54 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.01 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை 

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீரிடம்




இன்றைய ராசிபலன் :


மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு உள்ளது. அக்கம் பக்கத்தினருடன் அளவோடு பழகுவது நல்லது. வேலையில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அவற்றை அனுசரித்துச் செல்ல வேண்டும். உயர் பதவியில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் நண்பரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். மேஷ ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச் ஆகும்.


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்கள் இன்று சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. பெண்கள் தங்கள் தோழிகளுடன் மனம்விட்டு பேச நேரம் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு வெளியூருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். பதவி உயர்வு பற்றிய நல்ல செய்திகள் வரும். நண்பர்களாக இருந்தாலும், பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். யாரையும் நம்பி பணத்தைக் கொடுக்க வேண்டாம். உங்கள் உடல் நலம் இன்று சிறப்பாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நிறம் ரோஸ் ஆகும்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் உள்ளது. குறிப்பாக திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு தேவையற்ற மனக் குழப்பங்கள் வரலாம். சில சங்கடங்களும் ஏற்படலாம். எனவே, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன் இறைவனை வழிபட வேண்டும். இன்று சில காரிய தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சந்திராஷ்டமம் இருப்பதால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நிறம் கரும்பச்சை ஆகும்.


கடகம் - கடக ராசிக்காரர்கள் சிகிச்சையில் இருந்தால், இன்று பூரண குணம் அடைவார்கள். உங்களின் உத்யோகம் சாதகமாக இருக்கும். உங்கள் நீண்ட கால கோரிக்கைகள் இன்று நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகள் கிடைக்கும். அதே நேரத்தில், வேலைச்சுமையும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். பணவரவு இன்று அதிகரிக்கும். கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு ஆகும்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கங்கள் நீங்கும். தடைகள் விலகும். உங்களுக்குரிய பங்குத் தொகை வந்து சேரும். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். உங்கள் உடல் நலம் இன்று சிறப்பாக இருக்கும். சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை ஆகும்.


கன்னி - கன்னி ராசிக்காரர்கள் பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் சீராக இருக்கும். உங்களின் உத்யோகம் நீங்கள் விரும்பியபடி திருப்திகரமாக செல்லும். அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். புதிய முயற்சிகள் இன்று வெற்றி அடையும். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். கன்னி ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு ஆகும்.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்களிடையே இருந்த மனத்தாங்கல் நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கண் சிகிச்சை செய்வது நல்லது. புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் ஆகும்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். ஆன்மீகச் சுற்றுலா சென்று வருவீர்கள். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பண விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால், கோபப்படாமல் அமைதியை கையாளவும். விருச்சிக ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை ஆகும்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரு சிலருக்கு கூடுதல் சம்பளத்துடன் புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நல்லது. அது உங்களுக்கு நலம் தரும். மகன் மற்றும் மகளுக்கு வசதியான இடத்தில் இருந்து நல்ல சம்பந்தம் கூடிவரும். தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நிறம் சாம்பல் ஆகும்.


மகரம் - மகர ராசி மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும். புதிய வருமானத்துக்கு வழி பிறக்கும். வீட்டில் சுப செலவுகளுக்கும் இடம் உண்டு. உணவில் அதிகம் இனிப்புகளை சேர்க்க வேண்டாம். உடல் நலத்தை பார்த்துக் கொள்வது நல்லது. அரசு ஊழியர்களுக்கு டிரான்ஸ்பருக்கு வாய்ப்பு உள்ளது. மகர ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை ஆகும்.


கும்பம் -  கும்ப ராசிக்காரர்கள் கவலைப்பட வேண்டாம். விற்க முடியாத காலி மனையை தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உடல் நலம் சரியாகும். பணப்பொறுப்புக்களை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நிறம் பொன்னிறம் ஆகும்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு புதிய கிளைகள் திறக்கும் வாய்ப்பு உள்ளது. தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நல்லது. அது உங்களுக்கு நலம் தரும். சொந்த பிளாட் அல்லது நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கூடி வரும். பழைய கடன்கள் அடைபடும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். மீன ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் கற்க வேண்டியது நிறைய உள்ளது.. இன்னும் மேம்பட்டால்தான் நல்லது.. இல்லாவிட்டால் கஷ்டம்!

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. வாக்களிக்கத் தயாராகும் 7.4 கோடி வாக்காளர்கள்.. இறுதிப் பட்டியல் வெளியீடு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 01, 2025... இன்று இவர்களின் வாழ்க்கையே மாறும்

news

35 வயதுப் பெண்ணை மணந்த 75 வயது தாத்தா.. முதலிரவு முடிந்த மறு நாள் நடந்த விபரீதம்!

news

கரூரில் விஜய் பேரணியின் போது நடந்தது இதுதான்.. வீடியோ போட்டு விளக்கிக் கூறிய அமுதா ஐஏஎஸ்!

news

கரூர் சம்பவத்திற்குப் பிறகு திமுக அரசு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி

news

தமிழகத்தில் இன்று முதல் அக்., 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

உறுதியாக எனது அரசியல் பயணம் தொடரும்... சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்: விஜய்!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்