Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!

Jul 28, 2025,10:38 AM IST

ஆடிப்பூரம் விசுவாசு வருடம் 20 25 ஜூலை மாதம் 28ஆம் தேதி ஆடி பன்னிரண்டாம் நாள் திங்கட்கிழமை ஆடிப்பூரமும் ,சதுர்த்தி திதியும் அமைந்துள்ளது மிகவும் விசேஷமான நாள் ஆகும்.


இன்று விநாயகர் பெருமானையும், ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள். குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும் தம்பதியரும், விரைவில் திருமணம் நடைபெற வேண்டுமா ?... இந்த அற்புத நாளை தவற விடாதீர்கள்..


ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர தினத்தன்று உலகிற்கே தாயாக விளங்கும் அன்னை பராசக்தி அவதரித்த நாளாகவும் ,அன்னைக்கு வளைகாப்பு நடத்தும் நாளாகவும் ,ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினமாக "ஆண்டாள் ஜெயந்தி"யாக இந்த ஆடிப்பூர நாள் அன்று கோவில்களில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.




ஜூலை மாதம் 27ஆம் தேதி ஞாயிறு மாலை 6 :55 மணிக்கு பூரம் நட்சத்திரம் துவங்கி ஜூலை 28ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 8 மணி வரை உள்ளது. ஆடிப்பூரம் நாள் அன்று அம்மன் கோவில்களில் அம்மனுக்கு கண்ணாடி வளையல் மாலைகளை அணிவித்து வளைகாப்பு திருவிழா நடைபெறும். இந்த நாளில் பெண்கள் அம்பாளுக்கு விரதம் இருந்து மஞ்சள் ,குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கள பொருட்களை படைத்து வழிபடுவார்கள்.


ஏதோ ஒரு காரணங்களால் திருமணம் தடைபடுகிறது என்றாலும் ,பல சிகிச்சைகள் செய்து குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியரும் இந்த ஆடிப்பூரம் அன்று அம்மனை வழிபாடு செய்ய நல்ல பலன்கள் கிடைக்கும். அம்மனுக்கு கோவிலுக்கு செல்பவர்கள் கண்ணாடி வளையல்கள் வாங்கிச் சென்று, அம்மனுக்கு அணிவித்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.


அம்மனுக்கு மாலையாக அணிவிக்கும் கண்ணாடி வளையல்களை கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள் அதனை அணிந்து கொள்வது மிகவும் சிறப்பானதாகும். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு ஆடிப்பூரம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


மேலும் இன்று சதுர்த்தி திதியும் அமைந்துள்ளதால் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது அதீத சிறப்பு. வீடுகளில் பூஜை அறையில் ஒரு மனை  பலகையில் பச்சரிசி மாவினால்  கோலமிட்டு சிகப்பு நிற துணி விரித்து அம்மன் படம் அல்லது அம்மன் விக்ரகம் அதன் மேல் வைத்து மஞ்சள், குங்குமம் ,சந்தனம் வைத்து ,மலர்களால் அலங்கரித்து, வளையல்களை மாலையாகவும் அல்லது ஒரு தட்டில் வைத்தும்  நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல்  பாயாசம் இவற்றை வைத்து அம்மனுக்கு உரிய மந்திரங்களை சொல்லி தீப தூப ஆராதனை செய்து அம்மனை வழிபட அனைத்து வளங்களும் நலங்களும் அருள்வாள்.


திருமணத்தடை உள்ளவர்கள் விரைவில் வீட்டில் கெட்டி மேளம் கொட்ட வேண்டும் என்றும், திருமணமான தம்பதியர் குழந்தை சத்தம் கேட்க வேண்டும் என்றும் ,மனதார முழு  நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ளுங்கள் கட்டாயம் அம்பிகை அருள் புரிவாள். எந்த காரியத்தையும் நம்பிக்கையுடன் செய்தால் தானே நிஜமாகும் ...மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்