ஆனி மாத வளர்பிறை பிரதோஷம்.. சிவன் பார்வதி வழிபாட்டுக்கு உகந்த நாள்!

Jul 08, 2025,12:26 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஆனி மாதம் வளர்பிறை பிரதோஷம்: விசுவாசு வருடம் 20 25 ஜூலை எட்டாம் தேதி செவ்வாய்க்கிழமை ஆனி மாதம் 24 ஆம் நாள் வளர்பிறை பிரதோஷம். சிவன் ,பார்வதி வழிபாடும், நந்தி வழிபாடும் செய்ய உகந்த நாள்.


இன்று செவ்வாய்க்கிழமை"யில் வரும் பிரதோஷம் பௌம பிரதோஷம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் சிவபெருமானை வழிபடுவதனால் செல்வ வளம் கிடைக்கும் .கடன் பிரச்சனைகள் தீரும். குடும்பம் மகிழ்ச்சி பெருகும் என்பது நம்பிக்கை. அனைத்து சிவாலயங்களிலும் இன்றைய நாள் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், அலங்காரங்களும் நடைபெறும். 




இது ஆனி மாதத்தில் வரும் பிரதோஷம் தினமாகும். பிரதோஷம் என்பது வளர்பிறை பிரதோஷம்- சுக்ல பக்ஷ பிரதோஷம்; தேய்பிறை பிரதோஷம்- கிருஷ்ண பக்ஷ பிரதோஷம் என்று ஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதோஷங்கள் வருகின்றது. பிரதோஷம் என்பது தோஷங்கள் நீங்கும் நேரம் என்பதை குறிக்கின்றது இது மூன்றாம் யாமம் என்று அழைக்கப்படும் சந்திரோதய நேரம்- அதாவது மாலை 4:30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும் பூஜைகள் பிரதோஷ பூஜைகள் என்று அழைக்கப்படுகின்றன.


பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனமாடிய சிறப்பான நேரம் ஆகும். இந்த நேரத்தில் வேண்டுதல்கள் வைக்க ,அவரவர் தோஷங்கள் நீங்கி, வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று நந்தி தேவர் மற்றும் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு பால், பன்னீர் ,தேன் ,தயிர்  போன்ற அபிஷேக பொருட்களை வாங்கிச் செல்வதும் ,மலர்களும், வில்வ இலைகளும் வாங்கி செல்வது சிறப்பு.


ஆனி மாத வளர்பிறை பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் வியாதிகள் அனைத்தும் நீங்கும். உயரிய எண்ணங்கள், சிந்தனைகள், மனதில் நிறையும் .கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழும் கணவன் மனைவி சேர்ந்து வாழும் சூழல் உருவாகும் .படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் ஏற்பட்டிருந்த மந்த நிலை நீங்கி சிறப்பான கல்வி கிடைக்கும் என்பது நம்பிக்கை.


கர்மவினைகளும் ,பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். எந்த ஆபத்து ஏற்படாமல் மரண பயம் இன்றி சிவபெருமான் பக்தர்களை காப்பார். செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷம் ரு ண விமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது .உடல் நோய்களை போக்குவதற்காக வழிபடும் நாள்.


உலகை காப்பதற்காக ஆ ஆல கால விஷத்தை சிவபெருமான் அருந்திய காலம் இந்த பிரதோஷ காலமாகும் .நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்து விட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக் கூடியவர் .அதனால் தான் பிரதோஷம் அன்று நந்தியினுடைய காதில் மக்கள் அவரவர் பிரார்த்தனைகளை ரகசியமாக சொல்வார்கள். 


சிவபெருமானுக்கு வில்வ இலைகளும் பசும் பாலினை அபிஷேகத்திற்கு கொடுப்பதால் சகல நன்மைகளும் அளிப்பார். இன்றைய ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும், நந்தியையும் வழிபடுவதனால் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் .தீராத கடன் பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை.


ருணம் என்பது கடன் கடன் பிரச்சினையால் பலரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். ரோகம் என்றால் நோய். கடனும், நோயும் தான் மிகப்பெரிய இன்றைய பிரச்சினை. பிரச்சினைகளிலிருந்து விடுபட பிரதோஷ வழிபாடு சிறந்தது. சிவபுராணம் ,நீலகண்ட பதிகம் ,கோளறு பதிகம் போன்றவற்றை படிப்பது, பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும்.


வாழ்க்கை வளமாகும் என்ற நம்பிக்கையுடனும்  இன்றைய வாழ்க்கை ஒரு நாள் மாறும் என்கிற நேர்மறை எண்ணங்களுடனும், மனதார பிரதோஷ வழிபாடு செய்து அனைவரும் வாழ்வாங்கு வாழ்வோமாக. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

அதிகம் பார்க்கும் செய்திகள்